- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நாயகனாக அட்டக்கத்தி தினேஷ், வில்லனாக நடிக்கப் போறது யாரு...

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நாயகனாக அட்டக்கத்தி தினேஷ், வில்லனாக நடிக்கப் போறது யாரு தெரியுமா? – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருக்கிறார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்யாசமான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக டீன் ஏஜ் வயது காதலை, இந்த படத்தில் காமெடி கலந்து ஜாலியாக சொல்லியிருந்தார்.

இந்த படத்தில் நடித்து அறிமுகமான தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் போன்றவர்கள் இப்போதும், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்தில் இருக்கின்றனர். குறிப்பாக, ஹீரோயினை மையப்படுத்தி கதைகளில் முக்கியமான முதன்மை கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

அதே போல் தினேஷ், கலையரசன், நந்திதா போன்றவர்களும் ரசிகர்கள் கவனிக்கும்படியான ஒரு இடத்தில்தான் சினிமாவில் இப்போதும் இருந்து வருகின்றனர். நந்திதா, தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கலையரசன், வெப் சீரிஸ்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா ரஞ்சித் இப்போது சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். ராயன் படம் ரிலீஸ் காரணமாக, தங்கலான் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில், பா ரஞ்சித், அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. தங்கலான் படம் ரிலீஸ்க்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருந்த பா ரஞ்சித், அதை முன்கூட்டியே துவங்கி விடும் முடிவுக்கு வந்து விட்டார்.

பா ரஞ்சித் இயக்கும் இந்த புதிய படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி இருப்பது நடிகர் ஆர்யா. சமீபகாலமாக ஆர்யாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு அவருக்கு ஹீரோ வேடங்களில் நடிக்க போதிய வாய்ப்பில்லாத நிலையில், வில்லன் கேரக்டரில் நடிக்கும் நிலைக்கு வந்துள்ளார். அட்டக்கத்தி தினேஷூக்கு இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பது, ஆர்யா ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்