- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய முன்னாள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கூறியதாவது, நான் 20 வருஷமா ஆன்மீகத்தில் இருக்கேன். ஆனால் அது வெளியே தெரியாது. ஆன்மீகத்தில் இருக்கும் போது சினிமாவில் நடிச்சிட்டு இருந்தேன். இப்போ நான் திருப்பூர் பக்கத்துல தாராபுரத்தில் இருக்கேன். இங்க எப்படி வந்தேன் என்றால் காளிதேவி என் கனவில் வந்து இந்த இடத்தை காட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் இது எங்கே இருக்குதுன்னு தெரியாது. ரெண்டு வருஷமா தேடி இந்த இடத்திற்கு வந்திருக்கேன். இவ்வளவு நாள் நான் இருந்ததற்கான பலன் இங்கே வந்த பின்புதான் தெரிந்தது என்று நடிகை புவனேஸ்வரி கூறியிருக்கிறார். திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்த அவர் ஆன்மீகத்தில் இருப்பதாக கூறியதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





