- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க எல்லாம் சிஎம் ஆகி மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க? தவெக தலைவர் விஜயை கேள்வி...

நீங்க எல்லாம் சிஎம் ஆகி மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க? தவெக தலைவர் விஜயை கேள்வி கேட்ட பிக்பாஸ் பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்தாண்டு விக்கிரவாண்டியிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையிலும் தவெக சார்பில் மாநில அளவிலான அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். தொடர்ந்து கடந்த 13ம் தேதி முதல் உங்க விஜய் நான் வரேன் என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார்.

முதல் வாரத்தில் திருச்சி மற்றும் அரியலூரிலும் 2வது வாரத்தில் நாகை மற்றும் திருவாரூரிலும் விஜய் மக்களை சந்தித்து கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து கடந்த 3வது வாரம் சனிக்கிழமை மதியம் நாமக்கல்லிலும் தொடர்ந்து அன்று இரவு கரூரிலும் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி விட்டது.

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் அசீம். இவர் டிவி சீரியல் நடிகராக உள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும் செய்தி வாசிப்பாளராகவும் மக்கள் மத்தியில் அசீம் பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து நடிகர் அசீம் தனது வலைதள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, உங்கள பார்க்க வந்த கூட்டம் உங்க கண்ணு முன்னாடி மூச்சு முட்டி நின்னதை பார்த்தும் ஒண்ணும் பண்ணல. ஏர்போர்ட்டில் நிருபர் கேள்வி கேக்குறாங்க. அது காதுல வாங்காம புறமுதுகு காட்டிட்டு ஓடுறீங்க.

- Advertisement -

நீங்களெல்லாம் என்ன தலைவர்? தலைவரை கூட விடுங்க. என்ன மனுஷன்? நாலு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்க. இதையே எதிர்கொள்ளாத நீங்க எங்கே? சிஎம் ஆகலாம் என்று பகல் கனவு கண்டுகிட்டு இருக்கீங்களே, அப்படியே நீங்க சி எம் ஆனாலும் இந்த மக்களுக்கு என்ன பண்ணுவீங்க? ஒண்ணும் பண்ண மாட்டீங்க.

போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்ற ஒரு கருத்தை எனது உள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். பாதிக்கப்பட்ட கரூர் மக்களுக்காக நிற்போம் என்று அந்த பதிவில் நடிகர் அசீம் கூறியிருக்கிறார். இப்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்