- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க மாப்பிள்ளை நடித்த படங்களுக்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன், என் மகளை வாழாவெட்டியாக...

எங்க மாப்பிள்ளை நடித்த படங்களுக்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன், என் மகளை வாழாவெட்டியாக என்னால பார்க்க முடியலே – ஜெயம் ரவி மாமியார் வேதனை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் என்கிற நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தியதாக ஜெயம் ரவி கூறிய நிலையில், அவரது மாமியார் திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சுஜாதா விஜயகுமார் கூறியிருப்பதாவது, வீராப்பு படத்துக்கு பிறகு சின்னத்திரை தயாரிப்பில் கவனம் செலுத்திய என்னை திரைப்படங்களை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை சொன்னதே என் மாப்பிள்ளை ஜெயம் ரவிதான். அவரது ஆலோசனைப்படி தான் நான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

- Advertisement -

அடங்கமறு பூமி சைரன் ஆகிய படங்களை மாப்பிள்ளை ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக நான் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருக்கிறேன். அதில் 25 சதவீதத்தை ஜெயம் ரவிக்கு சம்பளமாக வழங்கியுள்ளேன். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இப்போது பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக நான் அவரை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. பைனான்சியர்கள் நீட்டிய எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அப்படி ஒன்று இருந்தால் அவர் அதை வெளியிட வேண்டும்.

- Advertisement -

இன்றுவரை என் பேரக் குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது.

ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய வேதனைகளை என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதுக்கு இல்லை என்று ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்