- Advertisement -
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். தொடர்ந்து ஆல்பம் படத்தில் துணை வேடத்தில் நடித்தார். என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். செல்ஃபி ஹாட் ஸ்பாட் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும் மறைந்த பிரபல இயக்குனர் ராஜசேகர் பேத்தி புவனேஸ்வரிக்கும் திருமணம் முடிவாகி இன்று கோவையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர். இயக்குனர் ராஜசேகர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு படிக்காதவன் தர்மதுரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





