- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் விஷால் திருமணம் நடக்கட்டும்… அப்புறம் அதைப் பத்தி பேசலாம் - நடிகர் அதர்வா கூறிய...

முதலில் விஷால் திருமணம் நடக்கட்டும்… அப்புறம் அதைப் பத்தி பேசலாம் – நடிகர் அதர்வா கூறிய அதிரடி பதில் – என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

பிரபலமான சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்குள் திருமண வாழ்க்கையில் அவர்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றுதான் அவர்களது பெற்றோர்களும் விரும்புகின்றனர். ரசிகர்களும் விரும்புகின்றனர். ஆனால் சில நடிகர் நடிகைகள் திருமண வயது கடந்து பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர்கள் சிலர் அடிக்கடி ஒரு கேள்வியை சந்திக்கின்றனர். அது உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விதான். இதற்கு சமீபத்தில் நடிகர் விஷால் பதில் தந்துவிட்டார். நடிகை சாய் தன்ஷிகாவை அவர் கரம்பிடிக்க போகிறார். பேராண்மை கபாலி அரவாண் பரதேசி போன்ற படங்களில் சாய் தன்ஷிகா முக்கிய கேரக்டரில் நடித்தவர்.

- Advertisement -

கடந்த செப்டம்பர் 29ம் தேதி தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால், அதே நாளில் திருமண நிச்சயதார்த்தையும் எளிதாக நடத்தி முடித்தார். சாய் தன்ஷிகாவுக்கு மோதிரம் மாட்டி தனது திருமணத்தை உறுதி செய்துவிட்டார். நடிகர் சங்கம் புதிய கட்டிடம் திறப்பு விழாவுக்கு பிறகு விஷால், சாய் தன்ஷிகா திருமண விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல் நடிகர் சிம்பு திருமணமும் விரைவில் கைகூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அவரும் 42 வயதுகளை கடந்துவிட்டார். ஆனால் இன்னும் அவருக்கு திருமண வாழ்க்கை கைகூடாமல் தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருப்பது எஸ்டிஆர் ரசிகர்களை விரக்தியடைய செய்து வருகிறது. அவரது தந்தை இயக்குனர் டி ராஜேந்தரும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த வரிசையில் நடிகர் முரளியின் மகன் அதர்வாவும் திருமணம் எப்போது என்ற கேள்வியை அடிக்கடி சந்தித்து வருகிறார். கடந்த 1989ம் ஆண்டில் மே மாதம் 7ம் தேதி பிறந்த அதர்வாவுக்கு வயது இப்போது 36 கடந்துவிட்டது. அவரது தம்பி ஆகாஷின் திருமணம் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. ஆனால் அதர்வா இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் அதர்வா நடித்த தணல் என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற படத்தின் நாயகன் அதர்வாவிடம், விஷாலுக்கு திருமணம் நடக்கப் போகிறது. உங்கள் திருமணம் எப்போது? என்று கேள்வி கேடக்கப்பட்டது. அப்போது அதர்வா, விஷால் எப்போது திருமணம் செய்து கொள்கிறாரோ, அதன்பிறகுதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன், என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்