கோலிவுட்டில் இன்றைய ஹாட் டாபிக் என்னவென்றால் சிவகார்த்த்கேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். என்னுடைய பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அது என்ன துரோகம் என்று வெளியில் சொல்லமாட்டேன் என இசையமைப்பாளர் இமான் கூறியதுதான். சிவகார்த்திகேயனும் இமானும் ரொம்பவே நெருக்கமானவர்கள். அதிலும் சிவாவின் ஆரம்பகால படங்களுக்கு இமானின் இசை ரொம்பவே உதவியிருக்கிறது.
சூழல் இப்படி இருக்க இமான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைத்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. சிவா தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் சொன்னதும் போதும்; அது என்ன துரோகமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் சிலர் இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு சிவகார்த்திகேயனே காரணம். அதைத்தான் இமான் மூடி மறைத்து சொல்கிறார் என்று பேச ஆரம்பித்தனர்.
விஷயம் திசை மாறி போவதை அறிந்த எஸ்கே ரசிகர்கள், சிவகார்த்திகேயன் மீது திட்டமிட்டே அவதூறு பரப்புகிறார்கள். தைரியம் இருந்தால் இமான் நேரடியாக விஷயத்தை சொல்ல வேண்டும் என பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் டி.இமானின் முதல் மனைவி மோனிகா இந்த விவகாரம் குறித்து முதல் ஆளாக மௌனம் கலைத்திருக்கிறார்.
பிரபல தனியார் ஊடகம் ஒன்றுக்கு இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், “இமானும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள். அதுமட்டுமின்றி எங்களுடைய குடும்ப நண்பரும்கூட சிவகார்த்திகேயன். எங்கள் குடும்பத்தின் மேல் ரொம்பவே அக்கறையாக இருப்பார். என் மகள்களுக்கும் அவரை பிடிக்கும். இமானுக்கும் எனக்கும் விவாகரத்து நடந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ முயன்றார் சிவகார்த்திகேயன். ஒருகட்டத்தில் அவர் இமானின் விவாகரத்து முடிவுக்கு சப்போர்ட் செய்யவில்லை.
நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றார். அது இமானுக்கு பிடிக்கவில்லை. தன்னுடைய முடிவுக்கு சப்போர்ட் செய்யாததைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார். அது எனக்கு புரிகிறது. ஆனால் அவர் சொன்னதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள். எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் சிவகார்த்திகேயன். இப்போது அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாவம் அவர். அதை நினைத்தால்தான் சங்கடமாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரொம்பவே டீசண்ட்டான நபர். இப்படி யூட்யூபில் பேட்டி கொடுத்தால் சிவகார்த்திகேயன் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும் என்றுகூட இமானுக்கு தெரியவில்லை. அவர் ஏற்கனவே பெண்ணை பார்த்து வைத்துதான் விவாகரத்து என்ற முடிவுக்கே வந்தார். விரைவில் விவாகரத்து தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என அரசியல்வாதியை வைத்தெல்லாம் மிரட்டினார். அவருக்கு பட வாய்ப்புகள் இப்போது எதுவும் இல்லை. அதனால் இப்படி பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்” என்றார்.





