- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், தந்தையின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்ட...

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், தந்தையின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்ட நடிகை சுஹாசினி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது மூத்த சகோதரர் சாருஹாசன். இவரது மகள்தான் நடிகை சுகாசினி. இவர் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சுஹாசினிக்கு கமல் சித்தப்பா ஆகிறார். கமல், சாருஹாசன், சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன், ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாத் துறையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாருஹாசன் ஆரம்பத்தில் இருந்தே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த வேதம் புதிது, ஜெய்ஹிந்த், சேவகன், விக்ரம் உள்ளிட்ட பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். தற்போது சாருஹாசனுக்கு 93 வயது ஆகிறது. எனினும் இப்போது சினிமாவில் நடிக்காமல் அவர் முதுமை காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனை சிறிய வயதில் இருந்தே வளர்த்தது, ஆளாக்கியது எல்லாம் சாருஹாசனும், அவரது மனைவியும் தான். இதை நடிகர் கமல்ஹாசன் பலமுறை நேர்காணல்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சாருஹாசனை என்னுடைய இன்னொரு அப்பாவாகவும், எனது அண்ணியை இன்னொரு அம்மாவாகவுமே நான் பார்க்கிறேன் என்று பலமுறை அவர் கூறியிருக்கிறார்.

இப்போது 93 வயதாகும் சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். முதுமை காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து அவரது மகளும் நடிகையுமான சுஹாசினி புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், தீபாவளிக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அப்பாவின் உடல்நிலை மோசமானதால், அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது என்று சுகாசினி கூறியிருக்கிறார்.

விரைவில் சாருஹாசன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர். பிரபல நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த அண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது. இப்போது ஏஐ தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்காவில் கமல்ஹாசன் தங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்