- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68-ல் இணைந்த 80'ஸ் நடிகர்... இன்னும் எத்தனை பேர்தான் இருக்காங்கன்னு முழுசா சொல்லி முடிங்கப்பா...

தளபதி 68-ல் இணைந்த 80’ஸ் நடிகர்… இன்னும் எத்தனை பேர்தான் இருக்காங்கன்னு முழுசா சொல்லி முடிங்கப்பா…

- Advertisement -

லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, விஜயுடன் கைகோர்த்திருக்கும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் தந்தை மகன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதில் தந்தை விஜய் கேரக்டருக்கு ஜோடியாக ஜோதிகாவையும், மகன் விஜய் கேரக்டருக்கு ஜோடியாக பிரியங்கா மோகனையும் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்வதை தவிர்த்து விட்டார் ஜோதிகா. ஏற்கனவே மெர்சல் படத்தில், நித்யா மேனன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஜோதிகாவை தான் அட்லி அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவை தொடர்ந்து சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடைசியாக சினேகா ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் விஜயின் தோற்றத்தை புதிதாக காட்ட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்காக சமீபத்தில் விஜய் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மூவரும் கலிபோர்னியா சென்று திரும்பினர். இது திரைப்படம் அரசியல் இல்லாமல் முழுக்க முழுக்க என்டேர்டைன்மென்ட் ரகத்திலேயே இருக்கும் என்று ஏற்கனவே வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

இப்படியான சூழலில் நேற்று தளபதி 68 திரைப்படத்திற்கான பட பூஜை நடைபெற்றது. இதில் விஜயுடன், நடிகர்கள் பிரசாந்த் பிரபுதேவா நடிகைகள் பிரியங்கா மோகன் மீனாட்சி சவுத்ரி சினேகா லைலா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அத்தனை பேரும் படத்தில் இப்போது இருக்கிறார்களாம். முதலாவதாக பாடலை சூட் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் தானாம்.

இந்த நிலையில் புதிய தகவலாக தளபதி 68 ல் மோகன் இணைந்திருக்கிறாராம். 1980 களில் புகழ்பெற்ற மோகன், தொடர்ந்து 25 திரைப்படங்களை வெற்றி படமாக கொடுத்து வெள்ளி திரை கதாநாயகன் என்று கொண்டாடப்பட்டார். ரஜினி கமலை போல் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திரைத்துறையில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு தளபதி 68 திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறாராம். இதுபோக நடிகர் ஜெயராம் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்