- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட முட்டாள்களா, நேத்து கட்சி ஆரம்பித்தவன், அதுக்குள்ள அடுத்த முதல்வரா? - விஜய் அரசியல் பிரவேசம்...

அட முட்டாள்களா, நேத்து கட்சி ஆரம்பித்தவன், அதுக்குள்ள அடுத்த முதல்வரா? – விஜய் அரசியல் பிரவேசம் குறித்து விளாசித் தள்ளிய பிரபல இயக்குநர்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்து டிவிகே தலைவராக ஆகி விட்டார். கோட் படப்பிடிப்பில், புதுச்சேரியில் இருக்கும் அவரை, தினமும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, விஜய்க்கு போனில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்த பலரும் பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்து வரும் நிலையில், ஒரு சிலர் மிகவும் மட்டமாக பேசி, விமர்சித்தும் வருகின்றனர். நாணயத்துக்கு 2 பக்கங்கள் போல, அரசியல், சமூக சேவை என பொதுவாழ்வுக்கு யார் வந்தாலும் பாராட்டும் வரும், விமர்சனமும் வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகதான் உள்ளது.

- Advertisement -

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், இரண்டுமே ஊழல், லஞ்சம், முறைகேடு போன்றவைகளுக்கு பெயர் வாங்கிய கட்சிகளாக தான் இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளில் பதவிகளில் இருந்தவர்கள் அனைவருமே இன்று கோடீஸ்வரர்களாக இருக்க காரணம், அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களில் ஊழல் செய்து, பல நூறு கோடிகளை அமுக்கியவர்கள்தான். அதனால், இரண்டு கட்சிகளுமே சரியில்லாத போதும், வேறு வாய்ப்பு இல்லாததால் திமுக, அதிமுக என மாறி மாறி மக்கள் ஓட்டுப் போடும் நிலைக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தள்ளப்பட்டனர்.

இதனால்தான், கடந்த 2005ம் ஆண்டில் தேமுதிக கட்சியை ஆரம்பித்து தமிழக அரசியலுக்குள் வந்த கேப்டன் விஜயகாந்துக்கு, மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது. எதிர்கட்சி தலைவராகவும் வெற்றி பெற்றார். அவர் மட்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நிச்சயம் அவர்தான் இன்றைய தமிழக முதல்வராக இருந்திருப்பார். அதனால்தான் இப்போது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வரும் விஜயை, மக்கள் வரவேற்கின்றனர் என்றாலும், ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டாமிராசு, முந்திரிக்காடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மு களஞ்சியம். தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். கருங்காலி, களவு தொழிற்சாலை, கதிரவனின் கோடை மழை போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவாளராக இருக்கிறார்.

விஜய் அரசியல் வருகை குறித்து, இயக்குநர் களஞ்சியம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஏண்டா முட்டாள்களா, நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், 14 வருஷமா தொண்டை தண்ணி வத்த கத்தறவனும் ஒண்ணாடா? இன்னும் கொடி என்ன, கொள்கை என்ன, எதையும் சொல்லல, அதுக்குள்ள அடுத்த முதல்வரா? என்று கோபமான கேள்விகளை எழுப்பி, தனது பதிவை செய்துளளார். இதில் 2026 அடுத்த முதல்வர் யார், உங்கள் ஓட்டு யாருக்கு என குறிப்பிட்டு சீமான், விஜய் புகைப்படங்கள் காணப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்