- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த ஹன்சிகா மோத்வானியின் திருமண வாழ்க்கை - விவாகரத்து வழங்கிய மும்பை...

4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த ஹன்சிகா மோத்வானியின் திருமண வாழ்க்கை – விவாகரத்து வழங்கிய மும்பை குடும்ப நல நீதிமன்றம் – ஜீவனாம்சம் கேட்க மறுத்த ஹன்சிகா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. நடிகை குஷ்பூவை போலவே கொழுக் மொழுக் நாயகியாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானியை சிலர் சின்ன குஷ்பூ என்றும் செல்லமாக அழைத்தனர். தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ஹன்சிகா அறிமுகமானார்.

அதன்பிறகு நடிகர் விஜயுடன் வேலாயுதம் சூர்யாவுடன் சிங்கம் 2 சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே சிம்புவுடன் வாலு உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி ரவி மோகனுடன் போகன் என பல படங்களில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்தபோது அவர்கள் இருவரும் காதலித்தனர்.

- Advertisement -

விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் இந்த திருமணம் தடைபட்டு நின்று போனது. இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்த சோஹைல் கத்தூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆன 3 ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சோஹைல் கத்தூரியாவை ஹன்சிகா பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை சோஹைல் கத்தூரியா மறுத்திருந்தார். இதற்கிடையே சோஹைலுடன் இருந்த திருமண புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து ஹன்சிகா நீக்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

மேலும் அவரை அன்பாலோவும் ஹன்சிகா செய்திருந்தார். இதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டது என்பதும் ரசிகர்கள் மத்தியில் உறுதியானது. இந்த நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தனது விவாகரத்து மனுவில் ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மும்பை நீதிமன்றம் ஜீவனாம்சம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடாமல் இருவருக்கும் விவாகரத்து மட்டும் வழங்கியுள்ளது. தொடர்ந்து இப்படி நடிகர் நடிகைகள் மத்தியில் விவாகரத்து அதிகரித்து வருவது ரசிகர்களிடையே பலத்தை ஏமாற்றத்தை தந்துள்ளது. மீண்டும் ஹன்சிகா சினிமாவில் நடிக்க வரலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்