- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் கட்சி தலைவர்களை நான் இனி சந்திப்பேன், ஆனால்… - பகிரங்கமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட...

அரசியல் கட்சி தலைவர்களை நான் இனி சந்திப்பேன், ஆனால்… – பகிரங்கமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மெகா ஸ்டார் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. பல சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் தந்திருக்கிறார். இவர் நேரடியாக தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் ஆன இவரது படங்களில் தமிழில் டப்பிங்கில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்துடன் ராணுவ வீரன் படத்தில் சிரஞ்சீவி வில்லனாக நடித்திருக்கிறார். அதே போல் மாப்பிள்ளை என்ற படத்தில் ரஜினி அமலா திருமண காட்சியில் கேமியோ ரோலில் ஒரு சண்டைக்காட்சியில் நடித்திருப்பார் சிரஞ்சீவி. நடிகர் ரஜினியின் நெருங்கிய திரையுலக நண்பர்களில் சிரஞ்சீவி மிக முக்கியமானவர்.

நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கானா ஆந்திராவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் ரசிகர்களும் சிரஞ்சீவி படங்களை மிகவும் ரசிக்கின்றனர். சண்டைக்காட்சிகள் மற்றும் நடனக் காட்சிகளில் சிரஞ்சீவி மிகவும் தனித்துவம் மிக்கவர்.

சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வம் காட்டிய நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார். ஆனால் சினிமாவில் கிடைத்த வரவேற்பு அரசியலில் சிரஞ்சீவிக்கு கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த சிரஞ்சீவி, எம்பி ஆக சில காலம் அரசியலில் நீடித்தார்.

ஆனால் சிரஞ்சீவிக்கு அரசியல் ஆர்வம் நாளடைவில் குறைந்து விட்டதால், இப்போது அரசிலை விட்டு விலகி சினிமாவில் ஆர்வமாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் இவரது தம்பி பவன் கல்யாண், அரசியல் கட்சி ஆரம்பித்து துணை முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த பிரம்மானந்தம் படத்தின் விழாவில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி பேசுகையில், நான் மீண்டும் அரசியலுக்கு திரும்புவேன் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் என் வாழ்வை இனி சினிமாவுக்காக தான் அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால் சினிமா சேவைகளுக்காக அரசியல் கட்சி தலைவர்களை நான் சந்திப்பேன், என நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.

சற்று முன்