- Advertisement -
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் மகேந்திரன் ஆரம்ப காலத்தில் வறுமையில் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கு தனது உணவை கொடுத்து பசி போக்கியவர் நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா. இந்த உண்மையை அறிந்த மகேந்திரன் அவர் இயக்கிய படங்களில் அம்மா கதாபாத்திரங்களுக்கு கௌசல்யாவின் மறுபெயரான லட்சுமி என்ற பெயரை வைத்திருக்கிறார். மேலும் தனது அனைத்து படங்களிலும் நடிகர் செந்தாமரைக்கு வாய்ப்பு அளித்து நன்றி கடன் செலுத்தியிருக்கிறார். இந்த தகவலை நடிகர் காதல் சுகுமார் கூறியிருக்கிறார்.





