- Advertisement -
Homeபொழுதுபோக்குகர படத்துக்கு பிறகு திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் தனுஷ், அதுவும் இத்தனை கோடிகளா?...

கர படத்துக்கு பிறகு திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் தனுஷ், அதுவும் இத்தனை கோடிகளா? அந்த 2 நடிகர்கள்தான் காரணமா?

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். இந்த படம் வெளியான போது ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற உருவக்கேலிக்கு அவர் ஆளானார். இந்த படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா என்றாலும் படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான் என்றும் பேசப்பட்டது.

தொடர்ந்து செல்வராகன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்தார். இந்த படத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனுஷின் திரை பயணம் வெற்றிக்கரமாக தொடர்ந்தது. அடுத்து புதுப்பேட்டை சுள்ளான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திருவிளையாடல் ஆரம்பம் தேவதையை கண்டேன் யாரடி நீ மோகினி என பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

- Advertisement -

இதற்கிடையே திரைப்பட தயாரிப்பாளராகவும் தனுஷ் மாறினார். பல படங்களில் சொந்த குரலில் அவர் பாடியும் இருக்கிறார். இந்த சூழலில் ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்த தனுஷ் அடுத்து ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை இதுவரை இயக்கி உள்ளார்.

போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்போது கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் மதுரையில் நடக்க உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை ரூ. 50 கோடி என்பதில் இருந்து ரூ. 75 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பழைய சம்பளம் ரூ. 50 கோடி தான் என்றும் கர படத்துக்கு பிறகு அவர் கமிட் ஆகும் படங்களில் சம்பளம் ரூ. 75 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி நடிகர் தனுஷ் திடீரென தனது சம்பளத்தை உயர்த்த காரணம், அவருக்கு பிறகு நடிக்க வந்த ஜூனியர் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் சம்பளம் ரூ. 50 கோடியாக மாறியுள்ளது. 4 படங்களில் தான் அவர் நடித்திருக்கிறார். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 70 கோடியாக மாறிவிட்டது. அதனால் தனது சம்பளத்தை ரூ. 75 கோடியாக தனுஷ் உயர்த்தி விட்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்