நடிகர் தனுஷூக்கு இது அதிர்ஷ்ட காலம் போலிருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் அவருக்கான அங்கீகாரமும், வரவேற்பும், முக்கியத்துவமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே லெவலில் நடிகர் தனுஷின் மார்க்கெட்டும், இமேஜூம் எகிறிக்கொண்டே இருந்தால், அவர் லெவலே வேற மாதிரி ஆகிவிடும் என்று ரசிகர்கள் கூறத் துவங்கி விட்டனர்.
சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். இது அவரது 50வது படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, ரூ. 130 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதுவரை தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படம் இதுதான். நடப்பாண்டில் வெளியான படங்களில், தமிழ் சினிமாவில் அதிக வசூலை கடந்த படமும் ராயன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயன் படம் வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கும் தனுஷ், அடுத்ததாக ஒரு படத்தை டைரக்ட் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கிடையே அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ளார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ளார்.
அத்துடன் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் குபேரா படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்துள்ளார். அதன்பிறகு இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாகிறது. கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார்.
இப்போது லேட்டஸ்ட் தகவலாக, மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் தனுஷ். இவர் ஏற்கனவே டைரக்டர் ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்கத்தில் தனுஷ் ராஞ்சனா என்ற படத்தில் நடித்து, அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. Tere ishq Mein என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இந்தி படத்தில்தான், தனுஷ் இரண்டாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கிறார்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. தமிழில் ராயன் கொடுத்த பெரிய மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷூக்கு இந்த இந்திப் படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் க்ரித்தி சனோன் என்ற முன்னணி நாயகி தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





