- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்தில் தனது மாமனார் ரஜினி வழியை பின்பற்றும் மாஜி மருமகன் தனுஷ்? தமிழ் முருகன்...

அரசியல் களத்தில் தனது மாமனார் ரஜினி வழியை பின்பற்றும் மாஜி மருமகன் தனுஷ்? தமிழ் முருகன் படத்தின் பின்னணி இதுதானா?

- Advertisement -

நடிகர் தனுஷ் மிக விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அவரது ரசிகர் மன்றக்கொடி வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வருகிற 28ம் தேதி அவரது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழாவாக அவர் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு தமிழ் முருகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே முருகப் பெருமான் பெயரில் சேயோன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், தனுஷ் நடிக்கும் படத்துக்கு தமிழ் முருகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர். அவர் கடவுள் மறுப்பாளர். அவரே தமிழ் முருகன் என்ற பெயரில் படத்தை இயக்குவது கேள்வியை எழுப்பியுள்ளது. அத்துடன் முருக கடவுளை மையப்படுத்தி இப்போது அரசியல் கட்சிகள் பலவும் களத்தில் உள்ளதால் தனுஷூம் அந்த வேலை கையில் எடுத்துவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கவிஞர் அறிவுமதி தமிழ் முருகன் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் முருகப்பெருமான் என்பவர் யார், அவர் அப்படி உருவானார் என்பதை பற்றி எல்லாம் விளக்கமாக தந்துள்ளார். அந்த நூலை மையப்படுத்திய கதைக்களத்தில் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த படம் உருவாக உள்ளது.

- Advertisement -

அந்த நூலில் கடலும் மலை சார்ந்த இடத்திலும் மிகப்பெரிய போர் வீரனாக வாழ்ந்தவர் முருகன். பின்னாளில் அவர் கடவுளாக எப்படி மாறினார் என்று அறிவுமதி அதில் கூறியிருக்கிறார். அந்த கேரக்டரில்தான் தனுஷ் ஹீரோவாக படத்தில் நடிக்க உள்ளார். இந்த தமிழ் முருகன் படத்தை வருகிற 2029ம் ஆண்டில்தான் படப்பிடிப்பையே துவங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் கடவுள் முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தவர் என்ற கதைக்களம் உள்ளதால், அதற்கு பதிலடியாக முருகப் பெருமான் தமிழ்நாட்டு கடவுள் என்பதை தெரிவிக்க இந்த படம் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் தனுஷ், தனது மாஜி மாமனார் ரஜினி வழியில் ஆன்மிக அரசியலை தேர்வு செய்யவும் இப்படி முருகப் பெருமான் கேரக்டரில் நடிப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்