புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தமிழக முதல்வர் விஜயின் வெற்றியை பார்த்து நடிகர் தனுஷூம் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்று கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. உண்மையில் நடிகர் விஜயின் தோற்றமும் அவரது நடிப்பும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை அவருக்கு பெற்று தந்திருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பல நற்பணிகளை செய்து அவர் மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். ஆனால் உண்மையில் நடிகர் தனுஷூக்கு மக்கள் செல்வாக்கு என்பதெல்லாம் கிடையாது. அவர் சினிமாவில் நடித்த வகையில் பெரிய அளவில் புகழ்பெற்றதும் இல்லை.
அவர் நடித்த சில படங்கள் தேசிய விருது பெற்றாலும் கூட அது இயக்குனர்களின் திறமையால் படைப்பாற்றலால் கிடைத்த வெற்றியே தவிர தனுஷ் என்ற தனிப்பட்ட நடிகருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது. இந்த சூழலில் சமீபத்தில் நமது பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் தனுஷ் காட்டிய ஆட்டிட்யூட்டும் அவரது செயல்பாடுகளும் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தனது பிறந்த நாள் விழாவின்போது தனது பெற்றோர் சகோதரிகள் தனது மகன்கள் என மேடையில் அவர்களை அமர வைத்திருந்தார் நடிகர் தனுஷ். அதாவது தன்னுடன் தனது குடும்பம் இருப்பதை மக்கள் மத்தியில் அறிவித்திருக்கிறார் நடிகர் தனுஷ். இதன் மூலம் சிம்பாலிக்காக முதல்வர் விஜயின் குடும்பமின்றி தனித்து வாழ்வதையும் அவர் குடும்பத்தை விட்டு விலகி இருப்பதையும் இதன் மூலம் அவர் சுட்டிக்காட்டி இருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் விஜயை போலவே நடிகர் தனுஷூம் மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. இப்படி குடும்பத்தை மேடை ஏற்றினால் பின்னாளில் குடும்ப அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்துக்கும் தனுஷ் ஆளாக நேரிடும். ஏனென்றால் இன்று பிளஸ் ஆக இருக்கும் இது எதிர்காலத்தில் மைனஸ் ஆக மாறவும் வாய்ப்புள்ளது. தனுஷின் நடவடிக்கைகள் அனைத்தும் தவெக மற்றும் விஜயை அப்படியே காப்பியடித்து அரசியலுக்கு வரத் துடிக்கிறார்.
பாஜக அல்லது திமுக என எந்த ஒரு கட்சியின் ஆதரவும் இல்லாமல் தனுஷ் இப்படி தனிப்பட்ட முறையில் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். சட்டசபை தேர்தலில் விஜய்க்கு எதிராக தனுஷ் களமிறக்கப்பட்டால் நிச்சயமாக அது காமெடியாக தான் இருக்கும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும் இன்னும் அரசியல் கட்சி துவங்குவதாக அறிவிக்கும் முன்பே பல தரப்பில் இருந்தும் நடிகர் தனுஷ் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது.





