சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா படம் வெளியானது. அதற்கு முன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், வழக்கத்துக்கு மாறாக நிறைய பேசினார். குறிப்பாக தன்னை பற்றி பெருமிதமாகவும் ஒரு கட்டத்தில் கொஞ்சம் ஓவராகவும் பேசினார். அவரது பேச்சு இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி பேசு பொருளாக மாறியது.
என்னை பத்தி என்னை வதந்தி வேணா பரப்புங்க, என்ன வேணா பேசுங்க. ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது. தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க. எனக்கு தீப்பந்தம் மாதிரி ரசிகர்கள் இருக்கறாங்க. அவங்க ரசிகர்கள் இல்லை. என்னுடைய கம்பெனியன்ஸ் என்று சகட்டுமேனிக்கு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியதை கேட்டு அவரது ரசிகர்களே அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக நயன்தாரா அல்லது சிவகார்த்திகேயன் குறித்துதான் இப்படி மறைமுகமாக தாக்கிப் பேசுகிறார் என்றும் ஒரு தரப்பில் விமர்சனம் எழுந்தது. நடிகர் சிம்பு ஆரம்பத்தில் இப்படிதான் பேசுவார். சிம்பு பாணிக்கு தனுஷ் மாறி விட்டாரா என்றும் விமர்சித்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாராவுடன், ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் தனுஷ் கூறியதாவது, கருத்து எல்லாம் சொல்லணும் என்றால் ரஜினி சார் தவிர மற்ற யார் சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. வேற யாருக்கும் அந்த தகுதி கிடையாது. கருத்து சொல்றவங்க சொல்லலாம். ஆனா கேட்கறவங்க கேக்கணும் இல்லே. அவர் சொன்னா மட்டும்தான் கேட்பாங்க.
கருத்து சொல்றது முதலில் ஒரு தகுதி இருக்கணும். அந்த தகுதி எனக்கு இன்னும் வரலே. அப்படி வரணும் என்றால் கிட்டத்தட்ட ஒரு 30 வருஷம் நான் வேலை செய்யணும். அப்புறம் வரலாம். நான் இருந்தால். இந்த மாதிரி எல்லாம் இருக்கிறது விஷயங்கள். இந்த ரோல் பண்ணணும். அந்த ரோலில் போய் உட்காரனும் என்று முடிவு செய்து ஆக்ட் பண்ண முடியாது.
இப்ப இருக்கிற நிலமைக்கு என்ன பெஸ்ட்டா பண்ண முடியும் என்பதை புரிஞ்சுக்கிட்டு குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி இந்த பக்கம் யார் ஓடறா, அந்த பக்கம் யார் ஓடறா என்பதை எல்லாம் பார்க்காமல் நான் எங்கே ஓடணும் என்று பார்த்து ஓடிக்கிட்டு இருக்கேன். அதுதான் கரெக்ட் என்று நினைக்கிறேன். அதுதான் பெஸ்ட் என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார். அப்போது அருகில் நடிகை நயன்தாராவும் அமர்ந்திருக்கிறார்.





