- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் பேரன் யாத்ரா ஹீரோவாக நடிக்கப் போகிறாரா? தனது மகன் குறித்து ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த...

ரஜினியின் பேரன் யாத்ரா ஹீரோவாக நடிக்கப் போகிறாரா? தனது மகன் குறித்து ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ். மூத்த மகன் செல்வராகவன் முதலில் இயக்குனராக பல படங்களை இயக்கிய நிலையில் இப்போது அவரும் நடிகராகி விட்டார். நடிகராக உள்ள நடிகர் தனுஷூம் இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய 4 படங்களை இயக்கி விட்டார். ஆக தனுஷ் வீட்டிலேயே 3 இயக்குனர்கள் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். அவர்களது குடும்ப வாழ்க்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இந்த சூழலில் ஐஸ்வர்யாவும் திரைப்படங்களை அவ்வப்போது இயக்கி வருகிறார். 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்து வை ராஜா வை லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். இடையில் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். இப்போது டெக்ஸ்லா என்ற படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கர என்ற படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷிடம், அவரது மகன் யாத்ரா சினிமாவில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் கூறியதாவது, என்னுடைய சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இப்போது யாத்ராவுக்கு 19 வயதுதான் ஆகிறது.

- Advertisement -

இப்போதும் அவரை ஒரு சிறுவனாகவே நான் பார்க்கிறேன். அவர் எதிர்காலத்தில் என்னவாக போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. அதை சொல்வதற்கு இப்போது ஏற்ற காலமும் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார். இதன்மூலம் யாத்ரா இப்போதைக்கு சினிமாவில் நடிக்க வரப்போவது இல்லை என்பது உறுதியாகி விட்டது.

இணையத்தில், விரைவில் யாத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் இயக்கி அவரே தயாரிக்க உள்ளார் என்று பரவிய தகவல்கள் தவறானது. இந்த பதிலின் மூலம் அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் யாத்ரா நடிக்க வருவதாக இருந்தாலும் அது அவரது கல்லூரி படிப்பை எல்லாம் முடித்து விட்டு அவரது விருப்பத்தின் அடிப்படையில்தான் அது நடக்கும் என்பதையும் தனுஷ் சூசகமாக கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்