போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் கர. இந்த படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கர படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். சென்னையில் நேற்று கர படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் தனுஷ் பேசியதாவது, கடந்த முறை பங்க் ஹேர்ஸ்டைல் வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். அதை இந்த முறை நிறைவேற்றியுள்ளேன். நான் பேசும்போது நீங்க கேட்டுகிட்டு இருப்பீங்க. அதனால் முதலில் சொல்லி விடுகிறேன். வடசென்னை 2 வரும். சீக்கிரமாக சத்தமாக வரும். நீங்கள் நினைத்ததை விட பக்கத்தில் வந்துவிடும்.
ஜெயிப்பதற்கு முதலில் சண்டை செய்யணும். நாம் ஜெயிக்க கடவுள் ஆசிர்வாதம் தேவை. எனக்கு அது இருக்கிறது. நல்ல விஷயங்கள் என்னை தேடி வருகிறது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. எனக்கு பத்தாம் வகுப்பு வரை நல்லா படிப்பு வந்தது. நான் எந்த இயக்குனரையும் தேடி வாய்ப்பு கேட்டது இல்லை. ஆனால் நல்ல படங்கள் எனக்கு கிடைத்தது.
எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. ஆனால் என் சகோதரிகள் அவர்களின் கணவர்கள் என் மகன்கள் ரசிகர்கள் என நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எனக்கு பொங்கல் தீபாவளி பிறந்தநாள் எல்லாமே ரசிகர்களை சந்திக்கிற இந்த நாள் தான். உங்க குடும்பத்தை நீங்க நல்லா பாத்துக்கோங்க. என்னை பைக்கில் ஃபாலோ பண்ணாதீங்க. இப்போது ரசிகர்கள் டேஸ்ட் மாறிவிட்டது.
இன்டர்நேஷனல் லெவலில் எதிர்பார்க்கிறார்கள். அதனால் பெஸ்ட்டாக கொடுக்கணும் என்பது என் எண்ணம். எனக்கு டார்கெட் என எதுவும் இல்லை. நான் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா என்று பேசினேன். அதை பலர் பாசிட்டிவ்வாக எடுத்தார்கள். சிலர் மீம்ஸ் போட்டார்கள். எல்லா வகையிலும் நான் கலைஞனாக சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். மீம்ஸ் போடுபவர்கள் மனதில் வன்மம் இருக்காது. அவர்களும் மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.
2010ம் ஆண்டு என்னால் மறக்க முடியாது. அன்றைக்கு தான் என் மகன் லிங்கா பிறந்தான். அந்த ஆண்டு ஒரு தேசிய விருது கிடைத்தது. அவன் முகத்தை யாத்ரா முகத்தை பார்த்தால் எனக்குள் இருக்கும் டென்ஷன் ஓடிவிடும். அந்தப் பவர் அவன்கிட்ட இருக்கும். என் உலகம் அவங்க தான். நான் கரடுமுரடான ஆள்தான். யாத்ராவை கையில் தூக்கியதும் என் குணம் மாறிவிட்டது என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார்.





