- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பையனை பார்த்து நான் அசந்து விட்டேன், அவனை பார்த்த பிறகு அப்படி ஒரு முடிவு...

அந்த பையனை பார்த்து நான் அசந்து விட்டேன், அவனை பார்த்த பிறகு அப்படி ஒரு முடிவு செய்தேன் – ஓபனாக பேசிய நடிகர் தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் தனுஷ். தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் அவரது இயக்கத்தில் ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் தனுஷை பொருத்த வரை அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி லைன் அப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் எச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர படம் நாளை ரிலீஸாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த கர படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் தனுஷ் பேசியதாவது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நான் நடிச்சிருந்தேன். அதுல கிளைமேக்ஸ்ல ஒரு சின்ன பையன் இருப்பான். அவன் குதிரையில் வந்து இறங்கி வருவான்.

கொஞ்ச நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு அந்த ரஷ் போட்டு பார்த்தப்போ அந்த பையனோட பெர்பாமென்ஸ் பார்த்துட்டு இந்த பையனோட நடிப்புக்கு பக்கத்துல நம்ம நடிப்பு சுத்தமா எடுபடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.ஏன்னா அந்த பையன் அவ்வளவு யதார்த்தமாகவும் உண்மையாகவும் நடிச்சிருந்தான்.

- Advertisement -

அந்த கிராமத்தில் இருக்கிற ஒரு பையனாகவும் இருக்கானே? இன்னும் நம்ம இதை விட நாம யதார்த்தமான நடிக்கணும். இன்னும் ஈஸியா நார்மலா நடிப்பில் நாம மாறணும். அதுக்கு அப்புறம் அந்த பையனை நான் அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சேன்.அந்த சின்ன பையன் எப்படி இருக்கிறான்? எப்படி நடிக்கிறான்?

ஸோ அந்த மாதிரி புதுமுகங்கள் வரும்போது அவங்க கிட்ட இருந்தும் நிறைய புது விஷயங்கள் கத்துக்கிற மாதிரி இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக பேசியிருக்கிறார். தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் தனுஷ், இப்படி ஒரு சிறுவனிடம் இருந்து நடிப்பை மெருகேற்ற கற்றுக் கொண்டேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்