துவக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடிகராக அறிமுகமான போது ஒல்லிப்பிச்சான் நடிகர் என உருவக்கேலி செய்யப்பட்டவர் நடிகர் தனுஷ். அவர் நடித்த சுள்ளான் திருடா திருடி புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திருவிளையாடல் ஆரம்பம் புதுப்பேட்டை படங்களை பார்த்த பலரும், அவரது நடிப்பை ஏற்றுக் கொண்டாலும் ஒரு ஹீரோவாக அங்கீகரிக்க முன்வரவில்லை.
ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் படங்களில் நடித்த பிறகு தனுஷை ஒரு முழுமையான ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்து விட்டனர். விஐபி விஐபி 2 யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அவரது இமேஜை மேலும் பலமடங்கு உயர்த்தியது.
இப்போது ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 3 படங்களை டைரக்ட் செய்துள்ள நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்து இட்லி கடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அந்த நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதால் இட்லி கடை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை நடிகர் தனுஷ் இயக்குவதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் இதை பலரும் நம்ப மறுத்த நிலையில், அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கப் போவது உண்மைதான் என்று நடந்த சம்பவங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஜனவரி மாதம் அஜீத்குமாரும் தனுஷூம் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது நீங்கள் நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்க ஆசைப்படுகிறேன் என்று அவரிடம் சொன்ன தனுஷ், ஒரு கதையை கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட அஜீத்குமார், கதை பிடித்திருக்கிறது. இருவரும் இணைவோம் என்று உறுதியும் சொல்லி இருக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதையடுத்து அஜீத்குமாருக்கு சொல்லிய கதையை ஸ்கிரிப்ட் ஆக தனுஷ் முழுமையாக தயார் செய்து வருகிறார். இதற்கிடையே வருகிற ஏப்ரல் மாதம் நடிகர் அஜீத்குமார் சென்னை வருகிறார். சில தினங்கள் மட்டும் இருந்துவிட்டு மீண்டும் வெளிநாடு கார் ரேஸூக்கு செல்கிறார். சென்னையில் அவர் இருக்கும் சில தினங்களில் தனுஷ், அஜீத்குமார் சந்திப்பு நடக்க உள்ளது. அதில் முழு கதையையும் சீன் பை சீன் ஆக சொல்லி இருவரும் இணையும் படம் குறித்து ஆலோசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.





