- Advertisement -
Homeபொழுதுபோக்கு18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த அந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறதா? இது...

18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த அந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறதா? இது சூப்பர் ஹிட் கேங்ஸ்டர் படமாச்சே என ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதுவரை தனுஷ் இயக்கத்தில் ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 3 படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்ததாக இட்லி கடை என்ற படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக உள்ளது.

நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் ஆரம்பகாலத்தில் தனது இயக்கத்தில் தனுஷை சில படங்களில் நடிக்க வைத்தார். குறிப்பாக காதல் கொண்டேன் புதுப்பேட்டை போன்ற படங்களில் தனுஷின் நடிப்பு மிக சிறப்பாக இருக்க காரணம், இயக்குனர் செல்வராகவன் அவருக்கு நடிப்பை துல்லியமாக கற்றுத் தந்ததுதான்.

- Advertisement -

அந்த வரிசையில் கடந்த 2006ம் ஆண்டில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் இது. இந்த படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதையில் நடிகர் தனுஷ், கொக்கி குமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சினேகா, சோனியா அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

அதிலும் நடிகை சினேகா அப்போது முன்னணி நடிகையாக இருந்த நிலையில் விலைமாது கேரக்டரில் புதுப்பேட்டை படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பார். புதுப்பேட்டை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். புதுப்பேட்டை படத்துக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்கள் மிகவும் அதிகமாக வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே நேரத்தில் இதுவரை வெளிவந்த கேங்ஸ்டர் படங்களில் புதுப்பேட்டை படம் போல் ஒரு சிறப்பான படம் இதுவரை வெளியாகவில்லை என்று திரை விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 26ம் தேதி புதுப்பொலிவுடன் 4கே தரத்தில் தமிழ்நாடு முழுவதும் புதுப்பேட்டை படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. இந்த படம் தெலுங்கில் வரவேற்பை பெற்ற அளவுக்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. அதேபோல் அடுத்ததாக இட்லி கடை படம் வரும் அக்டோபரில் வெளிவர உள்ளது. இதற்கிடையே இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். அடுத்ததாக போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் வருகிற 26ம் தேதி புதுப்பேட்டை படம் ரி ரீலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்