- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகையோட நடிக்க போறீங்களா, அவர் பக்கத்துல போய்டாதீங்க, உங்கள் இமேஜ் டேமேஜ் ஆகி விடும்...

அந்த நடிகையோட நடிக்க போறீங்களா, அவர் பக்கத்துல போய்டாதீங்க, உங்கள் இமேஜ் டேமேஜ் ஆகி விடும் – நடிகர் திலீப்பை எச்சரித்த மகள்

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருபபவர் திலீப். இவரது படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன. சமீபத்தில் அருண்கோபி இயக்கிய ராம்லீலா என்ற படம், திலீப்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியாரின் முன்னாள் கணவர் திலீப் என்பதும் குறிப்பிடத்தக்கது. மஞ்சுவாரியார் தற்போது ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன், அசுரன் படத்தில் தனுஷ்க்கு மனைவியாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். தொடர்ந்து இப்போது தமிழ் படங்களில், விளம்பர படங்களில் மஞ்சுவாரியார் அதிகமாக நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் திலீப் நடித்த பாந்த்ரா என்ற படம், வரும் நவம்பர் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராம்லீலா படத்தை இயக்கிய தருண்கோபிதான் பாந்த்ரா படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆவதையொட்டி பாந்த்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

பாந்த்ரா படத்தை பற்றிய மற்றொரு முக்கியமான விஷயம், இந்த படத்தில் முதன்முறையாக நடிகை தமன்னா நடித்திருக்கிறார். அதாவது, மலையாளத்தில் பாந்த்ரா படத்தில், தமன்னா அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில், திலீப்புக்கு அவர் ஜோடியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பாந்த்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் திலீப், சுவாரசியமான ஒரு தகவலை வெளியிட்டார் பாந்த்ரா படத்தில் நடித்த போது, தமன்னாவுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்க உள்ளதை, என் மகள் மீனாட்சியிடம் தெரிவித்தேன். அப்போது, தமன்னா மேடையில் நடனமாடும் போது அவர் அருகில் சென்றுவிடாதீர்கள். தூரத்திலேயே நின்று அவரை பார்த்து பாடுவது போல், வாயசைத்து நடித்து நடனமாடி விடுங்கள். ஏனென்றால், அவரை போல நடனமாட முயற்சித்து, உங்கள் இமேஜை டேமேஜ் செய்து கொள்ளாதீர்கள், என்று என் மகள் என்னை எச்சரித்தார்.

இதுகுறித்து, படப்பிடிப்புக்குச் சென்ற போது, என் மகள் என்னை எச்சரித்தது குறித்து தமன்னாவிடம் நேரில் சொன்னேன். இதைக்கேட்டு சிரித்த தமன்னா, எனக்கும் பெரிய அளவில் நடனம் எல்லாம் தெரியாது. டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை போல ஆடுவேன், என்று கூறினார். அதைக் கேட்டு நான் ரிலாக்ஸ் ஆனேன், என்று கூறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில், காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய அந்த நடனம்தான், திலீப் மகள், திலீபை இப்படி எச்சரிக்க காரணம் என்கின்றனர் கேரளா சினிமா ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்