- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்களும் மாத்துவோம்ல… தன் பெயரை திடீரென மாற்றிக்கொண்ட பிரபல நடிகரின் மகன் - இனி தாத்தா...

நாங்களும் மாத்துவோம்ல… தன் பெயரை திடீரென மாற்றிக்கொண்ட பிரபல நடிகரின் மகன் – இனி தாத்தா தான் கை கொடுப்பாருங்கற முடிவுக்கு வந்துட்டாரோ…

- Advertisement -

சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஜோதிடம் ஜாதகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தங்களது வாழ்க்கையில் பல விஷயங்களில் மாறுதல் செய்கின்றனர். அதிர்ஷ்ட கல் மோதிரங்களை அணிகின்றனர். வீடுகளை மாற்றிக்கொள்கின்றனர். குறிப்பிட்ட கோவில்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சென்று வழிபடுகின்றனர். சில முக்கிய பரிகாரங்களை செய்கின்றனர்.

இதில் சமீபகாலமாக நியூமராலஜி தங்களது பெயர்களில் மாற்றம் செய்கின்றனர். தங்களது பெயரில் மாற்றங்களை செய்கின்றனர். இதில் ஒரு சிலர் தங்களது பெயரையே மாற்றிக்கொள்கின்றனர். இது சினிமா துறையிலும் நடந்து வருகிறது. நடிகர் ஜெயம் ரவி, தொடர்ந்து தனது படங்கள் தோல்வியடைந்த நிலையில் இப்போது ரவி மோகன் என தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது நடிகர் கௌதம் கார்த்திக் தனது பெயரில் மாற்றம் செய்திருக்கிறார். இவர் நவரச நாயகன் கார்த்திக் மகன் என்பதும், நடிகர் முத்துராமனின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். இருவரும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டனர்.

கடந்த 2013ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தொடர்ந்து என்னமோ ஏதோ வை ராஜா வை முத்துராமலிங்கம் ரங்கூன் தேவராட்டம் இந்திரஜித் பத்துதல உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கௌதம் கார்த்திக்.

- Advertisement -

ஆனால் அவரால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற முடியவில்லை. அதே நேரத்தில் அவரது தந்தை நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக 1980 90களில் வலம் வந்தவர். சினிமா மீது அவர் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டியிருந்தால் கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஒரு உயரத்தை அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவில்லை.

நடிகர் கௌதம் கார்த்திக் இப்போது கிரிமினல் மற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நடிகர் ஆர்யாவுடன் அவர் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் போஸ்டரில் அவரது பெயர் கௌதம் ராம் கார்த்திக் என மாறியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கும் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றியிருக்கிறார். தனது தாத்தா பெயரில் உள்ள முத்துராமனில் இருந்து ராம் பெயரை சேர்த்துள்ளார். அப்பா தராத ராசியை தாத்தாவாவது தருவாரா என்பது போக போகத் தெரியும்.

- Advertisement -

சற்று முன்