- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் என்னோட டைட்டில், ஆனா லோகேஷ் கனகராஜ் எங்கிட்ட இதைப் பத்தி பேசல -...

கூலி படம் என்னோட டைட்டில், ஆனா லோகேஷ் கனகராஜ் எங்கிட்ட இதைப் பத்தி பேசல – சுடச் சுட கிளம்பிய அடுத்த பஞ்சாயத்து

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தனது 171 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று துவங்குவதாக கூறப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வெளியானது. படத்தின் பெயர் கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான டீசரில் ரஜினிகாந்த், அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்று வசனம் பேசியபடி அடியாட்களை அடித்து நொறுக்குவது போல் சண்டைக்காட்சியை அமைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்கிற அந்த வசனம், ரஜினி, கமல் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன் நடித்த கே பாலச்சந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் இடம்பெற்றது. ரஜினி மேடையில், சம்போ சிவ சம்போ என்று பாடும் பாடலின் இடையே வரும் வரிகளாகும். இதே பாடல் வரி வசனங்களை, அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து வெளிவந்த ரங்கா என்ற படத்தில், கராத்தே மணியுடன் ரஜினிகாந்த் பேசி நடித்திருப்பார்.

இப்போது அதே டயலாக்கை கூலி படத்தில் எடுத்து பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் டைட்டிலும் காப்பி, டீசரில் இடம் பெற்ற வசனமும் காப்பி என இப்படி காப்பியடிப்பதில் சிறந்து விளங்கும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அடுத்து கூலி முழு படத்தையும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்துதான் சுட்டு இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கடந்த 1982 ஆம் ஆண்டு இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தில் நடித்தபோது சண்டைக்காட்சியில் அமிதாப் பச்சன் வயிற்றில் இரும்பு குத்தியது. பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடி மறுஜென்மம் எடுத்து மீண்டு வந்தார். அதன்பிறகு சரத்குமார் – மீனா நடிப்பில், பி வாசு இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறுகையில், கூலி டைட்டில் என்னுடையது. நான்தான் சரத்குமார் மீனாவை வைத்து தமிழில் கூலி என்ற படத்தை தயாரித்தேன். ஆனால் ரஜினி நடிக்கும் படத்துக்கு கூலி என லோகேஷ் கனகராஜ் பெயர் வைத்துள்ளார். இதற்காக அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து பேசினார்கள். ரஜினி படத்துக்கு கூலி என பெயர் வைத்திருக்கிறோம் என்று என்னிடம் அனுமதி கேட்டார்கள். நான் உடனே சம்மதித்து விட்டேன். ஏனெனில் எனக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்