- Advertisement -
மண்டாடி பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக ஜெயம் பட வில்லன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பதாக ஒரு தகவல் நேற்று வெளியானது. இதை நடிகர் கோபிசந்த் தரப்பு மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் நாயகன் கோபிசந்த் வரவிருக்கும் தமிழ் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருப்பதாக வரும் தகவல் முற்றிலும் தவறானவை. இதுபோன்ற தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோபி சந்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு மற்றும் தகவல்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





