தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த் மட்டும்தான். தனது ஸ்டைலினால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் அவர், தற்போது வரை தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ரஜினியின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி திருவிழா கோலமாவதை நம்மால் பார்க்க முடிகிறது.
80, 90களில் கொடி கட்டி பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து விட்டார். தற்போது வரை இளம் இயக்குனருடன் அவர் பயணித்தும் வருகிறார். கடந்த காலங்களில், ரஜினிகாந்துக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமாக ஜெயிலரை கூறலாம்.
கதையில் அந்த அளவு பெரிய சுவாரசியம் இல்லை என்றாலும், ரஜினி வரும் இடங்கள் கிளாசிக்காக இருந்ததால் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்ப்பால் திக்கு முக்காடி போனார் ரஜினிகாந்த்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்தார். பாவம் அந்த திரைப்படம் வெளியானது ரஜினி ரசிகர்களுக்கு கூட இன்னும் தெரியாது. அந்த அளவுக்கு, மோசமான விமர்சனத்தை அந்த திரைப்படம் பெற்றது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இப்படியான சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கல்ட் கிளாசிக் திரைப்படமான தளபதி படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்மூட்டி இணைந்து நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் இளையராஜா.
தற்போது வரை தளபதி திரைப்படத்திற்கு என்று இங்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சூர்யா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்த ரஜினியை, இப்போதும் பலரும் வியந்து பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்திருக்கும் ரஜினி ரசிகர்கள் மீண்டும் தளபதியை திரையரங்குகளில் காண தயாராகி வருகிறார்கள்.





