- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதலிக்க நேரமில்லை படம் ஜெயம் ரவிக்கு ஜெயம் தருமா? நீண்ட கால தோல்வியில் இருந்து மீண்டு...

காதலிக்க நேரமில்லை படம் ஜெயம் ரவிக்கு ஜெயம் தருமா? நீண்ட கால தோல்வியில் இருந்து மீண்டு வருவாரா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் ஜெயம் ரவி நடித்தவர். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஜெயம் தனி ஒருவன் உனக்கும் எனக்கும் சந்தோஷ் சுப்ரமணியம் போகன் பேராண்மை போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றவை.

ஆனால் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்த்த அவரது படங்கள் இறைவன் அகிலன் சைரன் 108 மற்றும் பிரதர் போன்ற படங்கள் பலத்த தோல்வி படங்களாக இருந்தன. அதுவும் சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை தந்த எம் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த பிரதர் படமும் பிளாப் ஆனது பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது.

இந்நிலையில் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ள நடிகர் ஜெயம் ரவி, விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவ்வப்போது கோர்ட்டில் வழக்கு விசாரணையிலும் நேரில் ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நடிகர் ஜெயம் ரவி நடிகை நித்யாமேனன் நடிப்பில் வருகிற 14ம் தேதி காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸாகிறது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிருத்திகா உதயநிதி ஏற்கனவே வணக்கம் சென்னை காளி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். காதலிக்க நேரமில்லை அவர் இயக்கத்தில் வெளியாகும் 3வது படமாகும். இது காதலை மையப்படுத்தி படம் என்பதை படத்தின் தலைப்பே சொல்லிவிட்டது.

லவ் டுடே நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான முதல் படம் கோமாளி. ஜெயம் ரவி நாயகனாக நடித்த இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் காதலிக்க நேரமில்லை படம் ஜெயம் ரவிக்கு ஜெயம் தருமா, மீண்டும் கம்பேக் தர இந்த படம் உதவுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சற்று முன்