நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த விஜய் வெங்கட் பிரபு கூட்டணி தற்போது இணைந்து படம் எடுத்து வருகிறது. இதற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சுருக்கி கோட் என்று இதனை அழைக்க, படத்திற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் படத்திற்கு அவர் இசையமைக்கிறார். இதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கோட் திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அதில் ஒரு பாடலில் விஜய் பாடி இருப்பதாக தெரிவித்தார். நடிகை திரிஷாவும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஒருவேளை விஜய் பாடிய பாடலாக தான் இது இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நீண்ட நாட்களாக திரை உலகில் தலை காட்டாமல் இருந்த மைக் மோகன், நடிகை லைலா, பிரசாந்த் ஆகியோர் இந்த திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கின்றனர். இதுபோக நடிகைகள் சினேகா, மீனாட்சி சௌத்திரி, இவானா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
பிரபுதேவா, பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், யோகி பாபு, வி டிவி கணேஷ், யுகேந்திரன், ஜெயராம் என படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. டைம் ட்ராவல் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரியும். அதேசமயம் இந்த திரைப்படம் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு சிஎஸ்கே பேனாக வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான சூழலில் தாய்லாந்தில் சூட்டிங் பணியின் போது நடைபெற்ற சில சம்பவங்களை நடிகர் ஜெயராம் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “விஜய் எப்போதும் எனக்கு நல்ல நண்பர். எனது மிமிக்ரி மற்றும் ஜோக்குகளை அவர் ரசிப்பார். கோட் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. அதன் சூட்டிங் முடிந்த பின்னர் என்னையும் வெங்கட் பிரபுவையும் நடிகர் விஜய் மாடிக்கு அழைத்தார். அப்போது என்னிடம் சில ரசனையான கதைகளை கூறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்” இவ்வாறு ஜெயராம் தெரிவித்துள்ளார்.





