- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்புவை குறிப்பிட்டு நான் அப்படி சொல்லவில்லை; நடிகர் ஜீவா கொடுத்த விளக்கம், ஆனா அந்த...

நடிகர் சிம்புவை குறிப்பிட்டு நான் அப்படி சொல்லவில்லை; நடிகர் ஜீவா கொடுத்த விளக்கம், ஆனா அந்த படத்துல சிம்புவுக்கு பதிலா ஜீவா நடிச்சது ஏன்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களாக இருப்பவர்கள் சிலம்பரசன் மற்றும் ஜீவா. இருவருமே தமிழ் ரசிகர்களுக்கு நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள். இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று 40 ஆண்டு கால நிறைவை கொண்டாடி இருக்கிறார்.

அதே போல் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. சூப்பர் குட் பிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தந்த நிலையில் ஜீவாவும் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் கோ. இந்த படத்தில் ஜீவா புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயகியாக நடித்திருந்தார். தீவிரவாதிகளை மையப்படுத்திய இந்த கதையில் நடிகர் ஜீவா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கோ 2 படம் ஓடவில்லை.

கோ படத்தில் நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்ததாகவும், அவர் நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் ஜீவா நடித்ததாகவும் அப்போது பிரச்னை எழுந்தது. அதுகுறித்து பேசிய நடிகர் ஜீவா, கோ படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால் கோ படத்தில் நான் நடித்தேன்.

- Advertisement -

சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நண்பர்கள் என சொல்லிக்கொண்டு இருக்கும் சிலரை நம்பக் கூடாது. கூடவே இருந்து முதுகில் குத்தி விடுவார்கள் என்று நாம் ஒரு பதிவை செய்திருந்தேன். ஆனால் நாம் சிம்புவை தான் அப்படி சொன்னேன் என்று மாற்றி விட்டு விட்டார்கள். கடைசியில் அதுதான் பிரச்னையாகி விட்டது என நடிகர் ஜீவா கூறியிருந்தார்.

கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய கேரக்டரில் ஜீவா நடித்ததுதான் பிரச்னையின் ஆணிவேர் என்று அப்போது கூறப்பட்ட நிலையில், கூடவே இருந்து முதுகில் குத்தி விடுவார்கள் என பதிவிட்டவர் ஜீவா. அப்படி இருக்கையில் கோ படத்தில் நடிக்காமல் சிம்பு விலகியது ஏன் என்ற காரணத்தையும் அவர் சொல்லி இருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்