தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் கே பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சீடர். இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை ஆசிரியராக மதிக்கப்படுபவர். 1980 90களில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
மிக தீவிரமான எம்ஜிஆர் ரசிகராக கே பாக்யராஜ் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி துவங்கி மிக மோசமாக தோற்றுப் போனார். பிறகு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவாளராக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட கே பாக்யராஜ், சினிமா நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது. கருணாநிதி 46 வயதில்தான் முதலமைச்சர் ஆனார். ஆனால் ஜெயலலிதா 43 வயதில் முதலமைச்சர் ஆனார். பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா 39 வயதிலேயே முதல்வர் ஆகிவிட்டார். அவர் பையன் என்கிற ஒரே காரணத்தால்.
அதே மாதிரி முலாயம் யாதவ் சிங் மகன் அகிலேஷ் யாதவ் 38 வயதிலேயே சிஎம் ஆகிவிட்டார். எதைய்யா நீ குடும்ப அரசியல் என்று சொல்றே? ஸ்டாலின் அரசியலுக்கு வர எத்தனை வருஷம் ஆச்சு? சின்ன வயதிலிருந்து திமுகவிற்காக பாடுபட்டார். கட்சியை வளர்க்க சைக்கிளில் ஊர் ஊராக சுத்தினார்.
கட்சிக்காக எவ்வளவு அவஸ்தைகளை பட்டிருக்கிறார் கல்யாணம் முடிந்தபோது கூட சந்தோசமாக இருக்க முடியவில்லை. புது மாப்பிள்ளையாக விசாவில் உள்ளே போக வேண்டியதாகி விட்டது. எவ்வளவு போராட்டங்களை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். நம்ம உடனே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்ததே இல்லை.
கருணாநிதியுமே ஸ்டாலினுக்கு இன்னும் நிறைய அனுபவமாகட்டும் என்று பொறுமை காத்தார். ஸ்டாலினும் பொறுமையாக இருந்தார். 67 வயதில் அவர் சிஎம் ஆவதை வந்து குடும்ப அரசியல் என்று நாக்கூசாமல் சொல்றீங்களா? இதுக்கு மேல எப்படி பொறுமையாக இருப்பது, எப்படி அனுபவம் பெறுவது என எனக்கு புரியவில்லை என்று நடிகர் கே பாக்யராஜ் பேசியிருக்கிறார். விஜய்க்கு எதிராக சீனியர் நடிகர் கே பாக்யராஜ் பேசியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





