- Advertisement -
Homeபொழுதுபோக்குதணிக்கையில் சிக்கி முடங்கிய ஜனநாயகன் படம்…. மவுனம் கலைத்த நடிகர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கை -...

தணிக்கையில் சிக்கி முடங்கிய ஜனநாயகன் படம்…. மவுனம் கலைத்த நடிகர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கை – கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கி ரிலீஸாவது தடைபட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துகளை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கலைக்காக கலைஞர்களுக்காக அரசியல் அமைப்புக்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அது பகுத்தறிவால் வழிநடத்தப்படுகிறது. ஒருபோதும் முடக்கப்படாது. இது ஒரு கலைஞனை மட்டுமல்ல கலை மற்றும் கலைஞர்களுக்கு நாம் வழங்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.

திரைப்படம் ஒரு தனி நபரின் உழைப்பு மட்டுமல்ல. அது எழுத்தாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சிறு சிறு வணிகங்கள் உள்ளிட்ட ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இவர்களின் வாழ்வாதாரம் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் நடைபெறும் செயல்முறையை சார்ந்துள்ளது.

தெளிவு இல்லாத போது படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதார செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. பொது நம்பிக்கை பலவீனம் அடைகிறது. தமிழ்நாட்டு மக்களும் இந்தியாவின் திரைப்பட ரசிகர்களும் கலைக்கு ஆர்வம் பார்வைத் திறன் மற்றும் முதிர்ச்சியை கொண்டு வருகின்றனர். அவர்கள் வெளிப்படை தன்மைக்கும் மரியாதையாதைக்கும் தகுதியுடையவர்கள்.

தற்போது நமக்கு தேவையானது சான்றிதழ் வழங்கும் செயல்முறையை கொள்கை ரீதியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். தணிக்கைக்கான காலக்கடுவை வரையறுத்தல் வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு கட் அல்லது மாற்றத்திற்கும் எழுத்துப்பூர்வமான தர்க்கரீதியான காரணங்களை முன்வைத்தல் ஆகியவை அவசியமாகும்.

ஒட்டுமொத்த திரைத்துறையும் ஒன்றாக இணைந்து அரசுடன் அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான உரையாடலின் ஈடுபடும் தருணமும் இதுதான். இதுபோன்ற சீர்திருத்தங்கள் படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை உயர்த்தும். மேலும் கலைஞர்கள் மற்றும் மக்களின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை இது வழிப்படுத்தும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

சற்று முன்