- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பகீர் சம்பவத்துக்கு பின் எம்ஜிஆர் - எம்ஆர் ராதாவும் நேருக்கு நேர் சந்தித்த போது…...

அந்த பகீர் சம்பவத்துக்கு பின் எம்ஜிஆர் – எம்ஆர் ராதாவும் நேருக்கு நேர் சந்தித்த போது… – அதை நேரில் பார்த்த நடிகர் கமல்ஹாசன் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று நடிகர்கள் ரஜினி விஜய் கொண்டாடப்படுவதை விட ஒரு காலகட்டத்தில் பலமடங்கு கொண்டாடப்பட்டவர் யார் என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். அப்படிப்பட்ட நடிகர் எம்ஜிஆரை அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகவேள் எம்ஆர் ராதா, ஒருமுறை துப்பாக்கியால் சுட்டு விட்டார் என்ற தகவல் பலரும் அறிந்ததுதான்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி சூட்டில் கழுத்தில் பலத்த காயமடைந்த நடிகர் எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு பூரண குணமடைந்தார். ஆனால் குரலில் மட்டுமே மாற்றம் தெரிந்தது. இந்த சம்பவத்துக்கு அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டது. நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகன் நடிகர் ராதாரவி, மகள்கள் நடிகைகள் ராதிகா நிரோஷா என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். இவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் எம்ஜிஆருடன் நெருக்கமான நட்பில் இருந்தவர். சிறுவனாக இருக்கும்போதே ஆனந்தஜோதி என்ற படத்தில் எம்ஜிஆருடன் கமல் நடித்திருக்கிறார். அதனால் கமல் மீது எம்ஜிஆருக்கு அலாதி பிரியம் உண்டு. அதே போல் கடவுள் மறுப்பாளரான நடிகர் கமலுக்கு சிறு வயதில் இருந்தே நடிகவேள் எம்ஆர் ராதா மீது அதிகமான பற்று இருந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் நடிகர் பிரகாஷ் ராஜிடம் கூறியதாவது, எம் ஆர் ராதா ஜெயிலில் இருந்து வெளியே வந்து ஒரு வருஷம் இருக்கும். ஏவிஎம் சாரிட்டீஸ் கல்யாண மண்டபத்தில் ஒரு கல்யாண விழா கச்சேரி நடந்துட்டு இருக்கு. எம்ஆர் ராதா அங்கே உட்கார்ந்திருக்கிறார். நான் பின்னாடி உட்கார்ந்து அதை பார்த்துட்டு இருக்கேன்.

- Advertisement -

அப்போ அங்கே எம்ஜிஆர் வந்துட்டார். அப்போ அங்கே சபை எப்படி இருந்துருக்கும் என்று யோசித்து பாருங்க. இந்த பக்கமா எம்ஜிஆர் வந்தார். இவர் இங்க உட்கார்ந்துட்டு இருக்கார். நாங்க எல்லாம் பார்த்துட்டே இருக்கோம். என்ன ரியாக்சன் அங்க நடக்கப் போகுதுன்னு பரபரப்பா எல்லாரும் இருக்கோம்.

எங்களுக்கு அது புரியவே இல்லீங்க. நாங்க நினைச்சது, படிச்சது. அங்க வந்ததும் எம்ஜிஆர் அண்ணே வணக்கம் என்று கும்பிடறார். நல்லா இருக்கீங்களான்னு எந்திரிச்சப்படி எம்ஆர் ராதா அண்ணாவும் கேட்கிறார். அவர் உட்கார்ந்துட்டார். கச்சேரி பாட்டுக்கு நடக்குது, எனக்கு புரியவே இல்லை. இது நான் பார்த்தது, கண்ணால பார்த்தது ரெண்டு பேருமே அப்படி இருந்தாங்க. வியப்பா இருந்துச்சு முதலில் வணக்கம் சொன்னது எம்ஜிஆர் தான் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்