தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியாக இருக்கும் நடிகர் யார் என்றால் அது தனுஷ் தான். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், அடுத்ததாக தனது 50 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை தனுஷே இயக்கி வருவது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்திற்குப் பிறகு தனது 51 வது திரைப்படத்தில், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் தனுஷ் இணைய இருக்கிறார்.
கேப்டன் மில்லரை போன்று, பீரியாடிக் திரைப்படமாக இது உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனாவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சேகர் கமுலா உடனான படத்திற்கு பிறகு, பாலிவுட்டிற்கு செல்லும் தனுஷ் அங்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.
இதன் பிறகு தனுஷ் மாரி செல்வராஜ் ப்ராஜெக்ட் ரெடி ஆகிறது. தனது திரையுலக பயணத்திலேயே இதுதான் என் கனவு திரைப்படம் என மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறி இருப்பதால், இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தையடுத்து, மீண்டும் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் இணைகிறார்.
கேப்டன் மில்லர் இயக்குனரின் பணியை பார்த்து கவர்ந்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷின் வொண்டர் பார் நிறுவனமே இதை தயாரிக்கிறது. தொடர்ந்து ஹெச் வினோத்துடன் ஒரு படம், நெல்சன் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட் ஆகி இருக்கிறார் தனுஷ். தற்போது அவர் தனது ஐம்பதாவது படத்தை எடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, செல்வராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கான பிரம்மாண்ட செட் சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே போடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக நடிப்பதற்கு முதலில் இசையமைப்பாளர் தேவாவின் நாடி இருக்கிறார் தனுஷ்.
இந்த தகவலை இசையமைப்பாளர் தேவாவே சமீபத்தில் யூ டியூப் சேனலில் ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகர் தனுஷ் திடீரென எனக்கு போன் செய்து, தனது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். வடசென்னை உடல் மொழி எனக்கு எளிதாக வருவதால் நீங்கள் தான் நடிப்பதற்கு சரியாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நான் நடிக்க மறுத்து விட்டேன். எனக்கு நடிப்பு வராது என்பதை தனுஷிடம் புரிய வைத்ததால் அதிலிருந்து விலகி விட்டேன் என்று தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





