- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பிக்கலாங்களா… நான் வெறும் விமர்சகனாக மட்டும் பார்லிமென்டுக்குள் வரவில்லை, என்ன செய்வேன் தெரியுமா? - ராஜ்ய...

ஆரம்பிக்கலாங்களா… நான் வெறும் விமர்சகனாக மட்டும் பார்லிமென்டுக்குள் வரவில்லை, என்ன செய்வேன் தெரியுமா? – ராஜ்ய சபா எம்பி கமல்ஹாசன் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு திரைக்கலைஞனாக பல சாதனைகளை செய்தவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக நடன கலைஞராக பாடகராக கவிஞராக எழுத்தாளராக இயக்குனராக தயாரிப்பாளராக தொழில்நுட்ப கலைஞராக அவர் தமிழ் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ் சினிமாவின் முன்னோடி என்றால் அது நடிகர் கமல்ஹாசன்தான்.

சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை சாதனைகளை குவித்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018ம் ஆண்டில் திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களை தொடர்ந்து சந்தித்தார். ஆனால் சினிமாவில் கிடைத்த ஆதரவும் வரவேற்பும் அரசியலில் கமல்ஹாசனுக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் நடிகர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இதுவரை எந்த தேர்தலிலும் கமல் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. கட்சி தலைவராகவே இருந்தும் அவரால் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி வாகை சூட முடியவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய ஆரம்பத்தில், அவர் முதலில் எதிர்த்தது திமுகவை தான். வாரிசு அரசியல் தவறு என்று சாடிய கமல்ஹாசன் ஸ்டார்ச் லைட்டால் டிவியை உடைத்தார். திமுகவை பகிங்கரமாகவும் எதிர்த்தார். ஆனால் ஒரு கட்டத்தில் காலத்தின் கட்டாயம் என்று கூறி திமுகவின் ஆதரவாளராக மாறி இண்டியா கூட்டணியில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

- Advertisement -

ஆனால் அதற்கேற்ப பலன் இப்போது கிடைத்துவிட்டது. திமுகவுடன் ஆதரவுடன் இந்திய பாராளுமன்றத்துக்குள் ராஜ்ய சபா எம்பி ஆக இப்போது நடிகர் கமல்ஹாசன் அமர்ந்திருக்கிறார். சினிமாவில் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும், தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக அல்லது திமுக ஆதரவு இருந்தால்தான் பதவிக்கு வர முடியும் என்ற நடைமுறை யதார்த்தத்தை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு விட்டார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, நான் வெறும் விமர்சகனாக மட்டுமே பார்லிமென்டுக்குள் வரவில்லை. இந்தியா என்ற தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக சொல்வேன் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்