இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை லிஜோ ஜோஸ் மோல் சிறுவன் சாய் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பத்தா. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக சிறுவனின் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய ஹைப் கொடுத்து கதைக்களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த படத்தை இயக்குனர் அட்லி சொந்தமாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தில் நடக்கிறது. ஊருக்கு பெரிய ரவுடியாக இருக்கும் சாராய வியாபாரியான விஜய் சேதுபதி, ஒரு சிறுவனின் செய்கையால் 8 நாட்கள் கழிப்பிடத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் மீண்டு வெளியே வந்தாரா? சிறுவன் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.
பத்தா படம் வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன், பத்தா படத்தை படக்குழுவினருடன் சேர்ந்து ரசித்து பார்த்தார். அப்போது விஜய் சேதுபதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் உட்பட படத்தில் நடித்தவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டினார்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, வணக்கம் பத்தா படம் பார்த்தேன். முதலில் இதற்கு நன்றி சொல்லணும். இந்த மாதிரி படங்கள் வரணும். படம் பார்க்கும் போது தெரியும் சந்தோஷம் எவ்வளவு முக்கியமானது என்று. இது மிகவும் காமெடியான படம். எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
சைஸ் வாரியாக நடிகர்கள் இருக்காங்க. அதுக்குள்ள இருக்கிறதுல சின்ன நடிகர் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய நடிகர் ஏற்கனவே பெரிய நடிகர். அவரையும் பிடிக்கும். விஜய் சேதுபதி பிரமாதமா பண்ணியிருக்கிறார். நம்மாளு. பத்தா பாருங்க.
ஒருத்தருக்கு ஒருத்தர் நடிகர்கள் பார்த்தால் கூட இது நான் கூட பண்ணுவேன் என்று சொல்வாங்க. ஆனா இந்த படம் இவர் பண்ணினா தான் நல்லா இருக்கும். சில கதைகள் சிலருக்காக எழுதப்பட்டது. அதுவந்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதுமட்டுமின்றி இது ஒரு எமோஷனல் பிலிம். இது ஒரு பேமிலி டிராமா எல்லோரும் பாருங்க என்று நடிகர் கமல்ஹாசன் பேசி படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.





