- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் 237 படப்பிடிப்பு எப்போன்னு தெரியுமா? ஆனா கமல் அப்போ அந்த பஞ்சாயத்துல கொஞ்சம் பிஸியா...

கமல் 237 படப்பிடிப்பு எப்போன்னு தெரியுமா? ஆனா கமல் அப்போ அந்த பஞ்சாயத்துல கொஞ்சம் பிஸியா இருப்பாரே? – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் ஒருவர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான். அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த பிறகு, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியான ஒரு நபராக மாறிவிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படமான கல்கி 2898 ஏடி படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கமல்ஹாசன், ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றுள்ளார். அடுத்து அவரது நடிப்பில் இந்தியன் 2 படம், வருகிற 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஷங்கர் இயக்கிய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

அதே போல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்திலும் கமல் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சிலம்பரசன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, வருகிற செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. கமல், சிம்பு என இருவரை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த இடையறாத சினிமா நடிப்பு பணிகளுக்கு மத்தியில், மக்கள் நீதிமய்யம் அரசியல் கட்சி தலைவராகவும் பொறுப்பாக பல பணிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவர், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆதரவாக ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் கமிட் ஆகியிருக்கிறார். இது கமல், அவர்களது திறமையை பார்த்து தானாகவே முன்வந்து கொடுத்த வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவரது நெருங்கிய நண்பர் விக்ரம் தர்மா மீது கொண்ட அபிமானத்தால், தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு தர முன்பே விரும்பினார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு அதே துறை சார்ந்த அன்பறிவுக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் கமல்ஹாசன்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமல் 237 படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் இப்போது துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தக்லைப் படத்தில் நடித்து முடித்த பிறகு, வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தனது 237வது படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்துக்கொள்ள இருக்கிறார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வந்துவிடுமே, அந்த பஞ்சாயத்தையும் வாராவாரம் கவனித்துக்கொண்டு இந்த அதிரடி ஆக்சன் படத்திலும் கமல் நடிக்கிறாரா, என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்