தமிழ் சினிமாவில் பல படங்களில் நாயகனாகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நடிகர் கரண். அழகான இளமையான நடிகர்களில் இவரும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருக்கிறார். கமல்ஹாசன் நடித்த நம்மவர் என்ற படத்தில் கல்லூரி மாணவராக வில்லன் ரோலில் கரண் நடித்திருந்தார்.
தொடர்ந்து கருப்பசாமி குத்தகைதாரர் ராமன் அப்துல்லா தீ நகர் கோகுலத்தில் சீதை காதல் கோட்டை லவ் டுடே பொன்மனம் துள்ளித் திரிந்த காலம் கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஹீரோவின் நண்பனாக பல படங்களில் கரண் நடித்திருக்கிறார்.
எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் கரண். அதனால் காதல் படங்கள், அதிரடி சண்டை படங்கள் என எல்லாவிதமான படங்களிலும் தனது நடிப்பில் சிறப்பாக அந்த கேரக்டரை ரசிகர்களுக்கு தந்து விடுவார். குறிப்பாக கோட்டை மாரியம்மன் காத்தவராயன் என பல படங்களில் கரண் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
சினிமாவில் அழகான நடிகராக இருந்தும் தனக்கான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நடிகர் கரண் போதிய அக்கறை ஆர்வமும் காட்டவில்லை. நடிப்பு திறமை இருந்தும் தனக்கான படங்களை அவர் தேர்வு செய்யாமல் நழுவ விட்டதே அவரது சினிமா பயணத்தில் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கரண் இழந்து விட்டார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கரண் கூறியதாவது கடந்த 2006ம் ஆண்டில் சென்னையில் உள்ள டி நகரில் ஒரு கடையில் அஞ்சு ரூபாய்க்கு சாப்பாடு விப்பாங்க. நான் கொக்கி என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்துக்காக ஒரு காட்சியில் அந்த வண்டிக்கடையில் அஞ்சு ரூபா குடுத்து உண்மையாவே அந்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டேன்.
எனக்கு என்னன்னா அஞ்சு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கிறாங்க, சுவையா இருக்குமுன்னு நாம நினைக்கிறோம். ஆனால் சாப்பாடு கிடைச்சா போதும்ன்னு சாப்பிடுறவங்களை நினைக்கும்போது, உண்மையாவே அந்த காட்சியில நான் கண் கலங்கிட்டேன் என்று நடிகர் கரண் உருக்கமாக கூறியிருக்கிறார்.





