- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணத்தை நான் வெறுக்கிறேன், விருப்பம் இருந்தால் ஒருவருடன் வாழ்வேன் - புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள்...

திருமணத்தை நான் வெறுக்கிறேன், விருப்பம் இருந்தால் ஒருவருடன் வாழ்வேன் – புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள் திவ்யா போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் பிறகு ஹீரோ இப்போது குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். இன்னும் திருமணம் இல்லை. ஊட்டசத்து நிபுணராக இருந்த திவ்யா சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்பமனு அளித்தார். ஆனால் அவருக்கு திமுக தலைமை வாய்ப்பளிக்கவில்லை.

எனினும் திவ்யா சத்யராஜ் தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார். அதே போல் திமுக தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசிய நடிகர் சத்யராஜூம் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தார். ஆனால் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். தவெக வேட்பாளர்களை ஆதரித்து வீடியோவும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற திவ்யா சத்யராஜ் பேசியதாவது, இருவர் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே காதல் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொண்டோமே என்பதற்காக அவர்கள் ஒன்றாக இருக்கக் கூடாது. ஆனால் இப்போது திருமணமே கார்ப்பரேட் ஆகிவிட்டது. ஒரே மதம் ஜாதகம் பொருத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எனக்கு ஜாதகமே இல்லை என்பதை பொறுமையாக சொல்வேன். என்னுடைய அப்பா ஜாதகத்தை நம்ப மாட்டார். நானும் அதை நம்ப மாட்டேன். அதனால் எனக்கு ஜாதகமே இல்லை. ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து நடக்கும் கார்ப்பரேட் வெட்டிங்கை நான் வெறுக்கிறேன். எனக்கு ஒருவரை பிடித்திருந்தால் அவருடன் வாழ்வேன். தாலி கட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

- Advertisement -

இதற்காக நான் காதலித்தது இல்லை என்று சொல்லிவிட முடியாது. நானும் காதலித்து இருக்கிறேன். எனக்கும் பல புரபோஸ்கள் வந்தது. எனக்கும் பிரேக் அப் நடந்தது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் ராஜா ராணி படத்தில் வருவது போல அப்பாவிடம் சென்று அழமாட்டேன். தனியாக பாத்ரூமுக்கு சென்று நான் அழுதிருக்கிறேன்.

திருமண விஷயத்தில் அப்பா இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. நான் தனியாக இருந்தாலும் அவர் சந்தோஷப்படுவார். விரும்பிய ஒருத்தருடன் வாழ்ந்தாலும் அவர் சந்தோஷப்படுவார். ஆனால் என்னுடைய இரண்டே இரண்டு கண்கள் என்னவென்றால் ஒன்று நியூட்ரிசன் மற்றொன்று அரசியல் மட்டும் தான் என்று திவ்யா சத்யராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்