- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் ரவியும் ஏற்கனவே அதை பற்றி பேசிவிட்டோம்… விரைவில் அது நடக்கும் - நடிகர் கார்த்தி...

நானும் ரவியும் ஏற்கனவே அதை பற்றி பேசிவிட்டோம்… விரைவில் அது நடக்கும் – நடிகர் கார்த்தி சொன்ன தகவலால் உற்சாகமான ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ரவி மோகன். இப்போது அவர் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக துவங்கியுள்ள நடிகர் ரவி மோகன், நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழா இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி சிவகார்த்திகேயன் எஸ்ஜே சூர்யா அதர்வா மணிகண்டன் சிவராஜ்குமார் யோகிபாபு ஜெனிலியா இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு நடிகர் ரவி மோகனை வாழ்த்திப் பேசினார்கள்.

இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது, எனக்கு ரவி கிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம். மனசால கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு ஆளு அவர். அவரால அப்படி நினைக்க முடியாது. அதனால் ரவியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இன்னிக்கு அவர் வந்திருக்கிற தூரம் மிக அதிகம். நானும் அவரும் உட்கார்ந்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம். அவர் டைரக்சனில் அவரும் நானும் சேர்ந்து நடிக்கிற ஒரு கதையை பத்தி நாங்க பேசிட்டோம். நாங்க ஆல்ரெடி பேசியிருக்கோம். ஆனா இது ரொம்ப சர்ப்ரைஸ். ரவி எப்பவும் காமெடி பண்ணிட்டு இருப்பார். ரவியோட இன்னொரு பகுதி நம்ம யாருக்கும் தெரியாது.

ஜிம் கேரி அளவுக்கு ரவிகிட்ட திறமை இருக்கு. இன்னும் ராஜா அண்ணன் கூட ஸ்கிரீன்ல இன்னும் காமிக்கலே. ரவி டைரக்சனில் இப்போ யோகிபாபு ஹீரோவா நடிக்கிற படத்துல அதை எல்லாம் நாம பார்ப்போம் என்று நான் நினைக்கிறேன். அவர் என்னெல்லாம் காட்டலையோ அதை எல்லாம் யோகிபாபு மூலமா காட்டுவார்ன்னு நான் நினைக்கிறேன். கண்டிப்பா அது நடக்கும் என்று நான் நம்பறேன் என்று நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார்.

நடிகர் கார்த்தியும் நடிகர் ரவிமோகனும் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் 2 பாகங்களிலும் இணைந்து நடித்திருந்தனர். சில காட்சிகளில் ஒன்றாகவும் இணைந்து நடித்திருந்தனர். என்றாலும் ரவி மோகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியும் ரவி மோகனும் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கும். நடிகராக தொடர் வெற்றிகளை பெற முடியாத நிலையில் தயாரிப்பாளர், இயக்குனர் அவதாரங்களை நடிகர் ரவி மோகன் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்