- Advertisement -
Homeபொழுதுபோக்குதலையெழுத்து எப்படி இருக்கிறதோ அதன்படி தான் நடக்கப் போகிறது, விரக்தியில் பேசிய பிரபல டைரக்டர் சுந்தர்...

தலையெழுத்து எப்படி இருக்கிறதோ அதன்படி தான் நடக்கப் போகிறது, விரக்தியில் பேசிய பிரபல டைரக்டர் சுந்தர் சி – குஷ்புதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் மிக முக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. வெற்றிப் படங்களின் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுந்தர் சி முதல் படமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கி, இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நவரச நாயகன் கார்த்திக் ஹீரோக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

காமெடி பிளஸ் காதல் இவற்றை மையமாக கொண்ட படங்களையே தொடர்ந்து டைரக்டர் சுந்தர் சி இயக்கி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அந்த வகையில் முறைமாமன், மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். அதேபோல் அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்களையும் டைரக்ட் செய்து அசத்தினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் சுந்தர் சி இயக்குனராக இருந்தவர், திடீரென ஹீரோவாக மாறினார். சுராஜ் இயக்கத்தில், தலைநகரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சண்டை, முரட்டுக்காளை, பெருமாள், குரு சிஷ்யன், வீராப்பு உள்ளிட்ட பல படங்களில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

எனினும் அவ்வப்போது படங்களும் இயக்கி வருகிறார் அந்த வகையில் அவர் இயக்கிய படங்களில் அரண்மனை படம் தொடர்ந்து ரசிகர் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் இப்போது வெளியான படம் அரண்மனை 4. முதலில் சுந்தர் சி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அரண்மனை, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் சில ஆண்டுகள் இடைவெளிகளில் வெளிவந்தது. இந்த படங்கள் இரண்டாம், மூன்று பாகங்களாக பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சுந்தர் சி மீண்டும் அரண்மனை 4 படத்தை உருவாக்கினார். இந்த படம் நேற்று வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக டைரக்டர் சுந்தர் சி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி நடித்த இந்த கேரக்டரில் முதலில் நடிகர் விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தார். ஆனால் அவரது கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதி அந்த கேரக்டரில் நடிக்கவில்லை. அதன் பிறகு சுந்தர் சி அந்த ரோலில் நடித்தார். நேற்று வெளியான அரண்மனை 4 ஒரே நாளில் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கிடையே பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி, அரண்மனை 5 படத்தின் தலையெழுத்து அரண்மனை 4ல் தான் இருக்கிறது. அரண்மனை 4 வெற்றி பெற்றால், அரண்மனை 5 உருவாகும் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்