- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் மாதியே இந்த படமும் ஒரு எக்ஸ்பரிமென்ட் படம்தான், உளறிக்கொட்டிய நடிகர் கார்த்தி -...

அந்த படம் மாதியே இந்த படமும் ஒரு எக்ஸ்பரிமென்ட் படம்தான், உளறிக்கொட்டிய நடிகர் கார்த்தி – தலையில் அடித்துக்கொண்ட டைரக்டர்

- Advertisement -

நடிகர் கார்த்தி இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறார். பருத்திவீரன் துவங்கி, ஜப்பான் வரை அவர் நடித்த படங்களில் பல படங்களில் மிகச் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அதில் பல படங்கள் பேசப்படும் படங்களாக, மீண்டும் ரசிக்க தூண்டும் படங்களாக இருந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

குறிப்பாக அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான முதல் படம் பருத்தி வீரன். இந்த படத்தில் அறிமுக கதாநாயகன் போலவே கார்த்தி நடிப்பு இருக்காது. தென்மாவட்டத்தை சேர்ந்த சண்டியர்த்தனம் கொண்ட ஒரு ரவுடியின் தெனாவெட்டை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்திருப்பார். அதற்கு காரணம் அவரை அப்படி பருத்திவீரன் கேரக்டராக மாற்றியவர் இயக்குனர் அமீர். இதற்கும் கார்த்தி, அமெரிக்காவில் படித்து சென்னை திரும்பியவர்.

- Advertisement -

பருத்திவீரன் படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம், பையா, தோழா. சர்தார், கைதி, தீரன் அதிகாரம் 1, ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 உள்ளிட்ட பல படங்கள் கார்த்திக்கு நல்ல வெற்றியை கொடுத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆனால் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான். ராஜூ முருகன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் படம், கடந்த தீபாவளிக்கு வந்து மிக மோசமான படமாக தோல்வியை தழுவியது. கார்த்தி படங்களில் இதுபோன்ற பிளாப் படம் எதுவுமே கிடையாது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய, அந்த படத்தில் நடித்த எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஜப்பான் படம் டைரக்டர் கையில் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். ஹீரோ நடிகரின் தலையீட்டால் அந்த படம் டைரக்டர் வசம் இல்லாமல் போனது, படம் பிளாப் ஆனது என்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் இப்போது வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி, அமேசான் சார்பில் நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, இந்த படமும் ஒரு எக்ஸ்பரிமென்ட் படம்தான். ஜப்பான் படம் போலவே இருக்கும் என்று கூறியிருக்கிறார். படுதோல்வியடைந்த ஜப்பான் படத்தை, இந்த படத்துடன் ஒப்பிட்டு கார்த்தி உளறுவதை பார்த்து டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினர் தலையில் அடித்துக்கொண்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்