- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பிரஸ்மீட்டில் ஆவேசப்பட்ட நடிகர் ரவிமோகன் - உடனடியாக அவரை சந்தித்த...

தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பிரஸ்மீட்டில் ஆவேசப்பட்ட நடிகர் ரவிமோகன் – உடனடியாக அவரை சந்தித்த இளம் நடிகர், அடுத்து நடந்தது என்ன?

- Advertisement -

குடும்ப வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் உள்ள நடிகர் ரவிமோகன் சமீபத்தில் பிரஸ்மீட் நடத்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பல விஷயங்களை வெளிப்படையாக கூறினார். குடும்பத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்கள், தன் மீதான பழிகள், தனக்கு ஏற்பட்டுள்ள பல பிரச்னைகள் குறித்து ரவிமோகன் கண் கலங்கியபடி ஆவேசமாக பேசினார்.

என் பிள்ளைகளை கூட நான் பார்க்க முடியவில்லை. மொபைல் போனில் கூட என் மகன்களிடம் என்னால் பேச முடியவில்லை. செக்யூரிட்டி பாதுகாப்புடன் அவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். நான் அழிய வேண்டும் என்றுதான் சிலர் நினைக்கின்றனர். எனக்கு பிளாக் மேஜிக் வைத்திருக்கின்றனர் என்றும் அப்போது கூறினார்.

- Advertisement -

வழக்கமாக கலகலப்பான ஒரு நடிகராக இருந்த நடிகர் ரவிமோகன் இந்த பிரஸ்மீட்டில் பேசிய விதமும் அவர் சொன்ன விஷயங்களும் அவரது கண்ணீரும் ஆவேசமும் அதை பார்த்த ரசிகர்களை பெரிய அளவில் கவலைப்பட வைத்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது கூறியிருந்தார்.

நடிகர் ரவிமோகன் அளித்த இந்த நேர்காணல் வெளியான நிலையில் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் கார்த்தி, உடனடியாக சென்று நடிகர் ரவிமோகனை நேரில் சந்தித்து கட்டித் தழுவி ஆறுதல் கூறியிருக்கிறார். உனக்கு நான் இருக்கேன்டா எதுக்குடா இப்படி பீஃல் பண்றே? எதற்கும் கவலைப்படாதே என்று கூறி அவரை மோசமான ஒரு மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ரவிமோகன் கூறியிருந்த நிலையில், அப்படி எல்லாம் இருக்க கூடாது. நீ படப்பிடிப்புக்கு போனால்தான் உனக்குள் நல்ல மாற்றங்களும் நல்ல எண்ணங்களும் ஏற்படும். இப்படியே தனிமையில் இருந்தால் கவலையே உனக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கார்த்தி அட்வைஸ் செய்திருக்கிறார்.

இதையடுத்து மனம் மாறிய நடிகர் ரவிமோகன் மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க கோவா கேரளம் போன்ற பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் ரவிமோகன் கார்த்தி இணைந்து நடித்திருந்தனர். இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்