- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் சுந்தர்.சியை கெட்டியாக பிடித்துக் கொண்ட பிரபல நடிகர்... மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கு பிறகு...

இயக்குனர் சுந்தர்.சியை கெட்டியாக பிடித்துக் கொண்ட பிரபல நடிகர்… மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கு பிறகு உருவாகிறது கூட்டணி…

- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, பொருளாதார பிரச்சினை காரணமாக அப்போது அந்த திரைப்படம் வெளியாகவில்லை.

இதனால் 13 ஆண்டுகளாக வெளிவர முடியாமல் தவித்திருந்த இந்த திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வசூல் மழை குவித்தது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் கொடுத்தது. தற்போது அடுத்ததாக நயன்தாராவுடன் சுந்தர் சி இணைகிறார்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அவர் இயக்க இருக்கிறார். இதன் முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி இருந்த நிலையில் அந்த திரைப்படம் நல்ல ரீச் ஆனது. இப்படியான சூழலில் தான் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி கையில் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ். இதற்கான பட பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார் நயன்தாரா. அதுபோக, பிரபல நடிகரையும் இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க சுந்தர் சி முயற்சி செய்து வருகிறாராம். அவர் யார் என்பதைத்தான் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சி விஷாலுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஊதிய பிரச்சனை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதாம். இப்படியான சூழலில் நடிகர் கார்த்தி இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது இயக்குனர் கூறிய ஒன் லைன் நடிகருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனடியாக இதை டெவலப் செய்ய கார்த்தி கூறியிருப்பதாகவும் விரைவில் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கார்த்தி தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து டானா காரனை எடுத்த தமிழ் இயக்கத்தில், கேங்ஸ்டர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த ப்ராஜெக்ட் முடிந்த பிறகு அவர் சுந்தர்சியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

- Advertisement -

சற்று முன்