தமிழ் சினிமாவில் ரோஜாக்கூட்டம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். முதல் படத்திலேயே இளங்கோ என்ற கேரக்டரில் பூமிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் சசி இயக்கிய இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் தமிழில் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் போஸ் பார்த்திபன் கனவு மெர்க்குரி பூக்கள் ஜூட் கனா கண்டேன் வர்ணஜாலம் என பல படங்களில் ஸ்ரீகாந்த் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். சில படங்களில் ஆக்சன் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் நடிகை சினேகாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே காதல் என்று தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சினேகா நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இயக்குனர் மு மாறன் இயக்கத்தில் பிளாக்மெயில் என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. பிளாக் மெயில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பிரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
போதைப் பொருள் வழக்கில் கைதானதால் குற்ற உணர்வு மற்றும் பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக தெரிய வருகிறது. சினிமாவுக்குள் வந்த போது ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஸ்ரீகாந்த். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை.
அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை. இதனால் சினிமா வாய்ப்புகளும் குறைந்து போயின. கடந்த ஆண்டு ஸ்ரீகாந்த் நடித்த தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய 2 படங்களுமே பிளாப் ஆகிவிட்டன. அதனால் ஹீரோ அல்லாத கேரக்டர்களிலும் ஸ்ரீகாந்த் நடிக்க தொடங்கினார். வெப் சீரிஸ் ஒன்றிலும் கடைசிாக நடித்திருந்தார்.
இந்த சூழலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கிக்கொண்டார். கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஒரு காலத்தில் பிரபல முன்னணி இளம் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களை வருத்தப்பட செய்திருக்கிறது.





