- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா? அதுகுறித்து விஜயிடம் ஏற்கனவே பேசி விட்டேன் - ஓபனாக பேசிய...

எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா? அதுகுறித்து விஜயிடம் ஏற்கனவே பேசி விட்டேன் – ஓபனாக பேசிய நடிகர் கார்த்தி!

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி 2007ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் ஆன நிலையில் 25க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்து விட்டார். இதில் பல படங்கள் கார்த்திக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் பி எஸ் மித்ரன் டைரக்சனில் நடிகர் கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யா மாளவிகா மோகனன் ஆஷிகா ரங்கநாத் யோகி பாபு ரஷிஜா விஜயன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரே வாரமே உள்ள நிலையில் படக்குழுவினர் தீவிர பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் படக்குழு தரப்பில் கார்த்தி எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருப்பசாமி கோவிலுக்கும் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி திரைப்படங்கள் வெளியான அன்றே இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகும் பைரசி குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில் அளித்தார். அப்போது நடிகர் கார்த்தி கூறியதாவது, முதலமைச்சர் விஜய்க்கு இந்த பிரச்சனை நன்றாகவே தெரியும்.

அவர் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். நான் அவரை சந்தித்தபோது, அண்ணா மற்றவர்களை விட உங்களுக்கு இந்த பிரச்சனையை நன்றாகவே தெரியும். நீங்களே இதை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.

எதிர்காலத்தில் எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் இல்லை. தொடந்து நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே என்னுடைய நோக்கம் என்றும் அப்போது நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறினார். ஏற்கனவே சர்தார் படம் வெளியாகி மாஸ் ஹிட் ஆன நிலையில் அதன் தொடர்ச்சியாக சர்தார் 2 படம் வெளியாக உள்ளது.

சற்று முன்