- Advertisement -
Homeபொழுதுபோக்கு250 ரசிகர்களை நேரில் வரவழைத்து விருந்து கொடுத்து அசத்திய நடிகர் கார்த்தி - இதுக்கு கண்டிப்பாக...

250 ரசிகர்களை நேரில் வரவழைத்து விருந்து கொடுத்து அசத்திய நடிகர் கார்த்தி – இதுக்கு கண்டிப்பாக விருந்து கொடுத்துதானே ஆகணும்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் சர்தார் 2 உருவாகி உள்ளது. வா வாத்தியாரே படமும் ரிலீஸ்க்கு ரெடியாகி விட்டது. அடுத்ததாக மார்ஷல் மற்றும் கைதி 2 படங்களில் நடிக்கவும் கார்த்தி தயாராகி வருகிறார். இதற்கிடையே தனது ரசிகர்கள் 250 பேரை நேரில் வரவழைத்து நடிகர் கார்த்தி சுடச்சுட விருந்து பரிமாறி மகிழ்ந்திருக்கிறார்.

கடந்த மே மாதம் 25ம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இரத்ததானம் செய்தனர். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். இவ்வாறு இரத்ததானம் செய்த ரசிகர்களில் 250 பேரை நடிகர் கார்த்தி நேரில் வரவழைத்து சந்தித்தார்.

- Advertisement -

சென்னை தி நகரில் உள்ள அலுவலகத்தில் ரத்தம் தானம் செய்த ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அவர்களுக்கு சுடச்சுட விருந்து பரிமாறப்பட்டது. மேலும் ரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு நடிகர் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது நடிகர் கார்த்தி கூறியதாவது, என்னுடைய பிறந்தநாளில் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் அப்போது ஊரில் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இரத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்சப் குரூப்பில் இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இரத்தம் கொடுத்திருப்பது பல அம்மாக்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது. உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது நான் உடன் பிறந்த அண்ணனோ தம்பியோ இல்லை.

ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்துக்கும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் லவ் யூ என்றுதான் சொல்ல வேண்டும். மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் வேட்டி அணிந்து மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன் என்று நடிகர் கார்த்திக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்