- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தில் கார்த்தி... இயக்குனரின் பெயரை கேட்டதும் ரசிகர்கள் குஷி... கதை தேர்வில்...

மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தில் கார்த்தி… இயக்குனரின் பெயரை கேட்டதும் ரசிகர்கள் குஷி… கதை தேர்வில் கச்சிதம் காட்டும் கதாநாயகன்…

- Advertisement -

கார்த்தியின் 25வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆன அது, ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கார்த்தி.

 

- Advertisement -

இதில் அவரது 26 வது திரைப்படம் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது. நான் குமாரசாமி இதற்கு முன்பாக சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்து உள்ளார். கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் படத்தை இயக்குகிறார். இதற்கு வா வாத்தியார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

படத்தில் அவர் எம்ஜிஆர் ரசிகனாகவும், முழுக்க முழுக்க எம்ஜிஆரை கொண்டாடும் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவராகவும் நடிக்கிறார். முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரன் நடித்துள்ளார். வில்லனாக சத்யராஜ் இடம் பெற்று இருக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதேபோல் கார்த்தியின் 27 வது திரைப்படமாக மெய்யழகன் என்னும் படம் உருவாகி இருக்கிறது. 96 என்னும் காதல் காவியத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரேம்குமார் தான் இதன் இயக்குனர். தஞ்சாவூர் மண்ணில் குடும்ப களத்தை பின்னணியாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

இதில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் காக்கி சட்டை ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் முக்கிய கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதற்குப் பிறகு அவர் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். பிறகு கைதி 2விலும் அவர் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த சூழலில், கார்த்தியின் முப்பதாவது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை, டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்குகிறார். 1960களில் கேங்ஸ்டர் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகிறது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான வேலைகளில் தமிழ் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்