- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களை கலகலக்க வைப்பதற்காக அடுத்த படத்திற்கு திட்டம் தீட்டும் சுந்தர் சி... நகைச்சுவை படத்தின் மூன்றாம்...

மக்களை கலகலக்க வைப்பதற்காக அடுத்த படத்திற்கு திட்டம் தீட்டும் சுந்தர் சி… நகைச்சுவை படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிப்பது இந்த இளம் நடிகரா…

- Advertisement -

முறைமாமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்சி. தனது முதல் திரைப்படத்திலேயே காமெடிக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து கதையையும் சிறப்பாக வடிவமைத்ததில் கவனம் பெற்றார் அவர். அன்று முதல் தமிழ் சினிமாவில், மசாலா திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனராக சுந்தர் சி மாறினார்.

அவர் இயக்கும் திரைப்படங்களில் பட்ஜெட் குறைவாகவும், காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் ஹியூமர் காட்சிகள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு படங்களும் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டன. அதிலும் குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு டெம்ப்ளேட் ரகம் என்று கூறலாம்.

- Advertisement -

படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை நம்மளை இடைவிடாமல் சிரிக்க வைத்த சுந்தர் சி, அந்த திரைப்படத்தின் முலம் தான் யார் என்பதை நிரூபித்தார். கவுண்டமணியும் கார்த்திக்கும் அடித்த ஒவ்வொரு லூட்டியும் ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் திரையரங்குகளில் சிரிக்க வைத்து ரசிகர்களின் வயிற்றை புண்ணாக்கியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணியை இயக்குனர்கள் பட்டியலில் சுந்தர் சி இணைந்தார்.

தொடர்ந்து ரஜினியை வைத்து அருணாச்சலம் உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சுந்தர் சி, தலைநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது வரை பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்தும் வருகிறார். அதேசமயம் இயக்கத்திலும் சுந்தர் சி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

நடிப்பை சிறிது காலம் ஒத்தி வைத்து விட்டு அவர் இயக்கிய, கலகலப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் விமல் மிர்ச்சி சிவா உள்ளிட்டோம் நடித்திருந்தனர். சந்தானம் இடைவெளிக்கு பிறகு வந்து, படத்திற்கான வெற்றியை உறுதி செய்தார். கலகலப்பு திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அதன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கினார்.

ஜெய் மற்றும் ஜீவா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ஓரளவு வெற்றி பெற்றது. இப்படியான சூழலில் தற்போது அடுத்ததாக கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்க இருக்கிறாராம். முந்தைய பாகத்தில் நடித்த ஜெய், ஜீவா உள்ளிட்டு வரும் இந்த பாகத்தில் இடம் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலால் சுந்தர் சி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்